இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ அல்லது எங்கள் நம்பிக்கையைப் பின்பற்ற அனுமதிக்க மோகன் பகவத் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அதில், “நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்து ராஷ்டிரமாகவே இந்தியா இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களும் அச்சமின்றி வாழலாம். அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. ஆனால், சில விஷயங்களை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
தேவையில்லாமல் தங்களின் பெருமைகள் குறித்தும், வரலாறு குறித்தும் முஸ்லிம்கள் தம்பட்டம் அடிக்கக் கூடாது. உதாரணமாக, “நாமே உயர்ந்தவர்கள்”, “ஒரு காலத்தில் இந்தியாவை நாம் ஆண்டோம்; மீண்டும் நாம் ஆளுவோம், நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அதனால்தான் நம்மால் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை” என்பன போன்ற பேச்சுகளை இஸ்லாமியர்கள் கைவிட வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.
மோகன் பகவத்தின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ அல்லது எங்கள் நம்பிக்கையைப் பின்பற்ற அனுமதிக்க மோகன் பகவத் யார்? அல்லாஹ் விரும்பியதால் நாங்கள் இந்தியர்கள். எங்கள் குடியுரிமைக்கு நிபந்தனைகள் விதிக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது? நாக்பூரில் உள்ள பிரம்மச்சாரிகள் என்று கூறப்படும் ஒரு கும்பலுக்கு எங்கள் நம்பிக்கையை சரிசெய்ய நாங்கள் இங்கு வரவில்லை” என்று கூறியுள்ளார்.
“பிரதமர் மோடி ஏன் மற்ற நாடுகளின் அனைத்து இஸ்லாமிய தலைவர்களையும் அரவணைக்கிறார், ஆனால் தனது சொந்த நாட்டில் ஒரு இஸ்லாமியரை கூட ஒருபோதும் கட்டிப்பிடிக்கவில்லை?” என்று ஓவைசி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : india today
Vck to hold protest against Governor Rn Ravi – Sangathamizhan Interview | Thiruma| Dmk Vs Governor
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.