Aran Sei

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கேள்வி

Credit : The Wire

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஹோஷியார்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பிப். 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியால் யாருக்குப் பலன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

”பிரதமர் மோடி, அவரது நண்பர்களான பெருமுதலாளிகளுக்கு உதவ முயன்றதால், ஒரு வருடமாக பஞ்சாப் விவசாயிகள் பசியில் இருந்தனர். போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்த கூட பிரதமருக்கு நேரமில்லை. மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அவர் இழப்பீடும் வழங்கவில்லை. அதை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் வழங்கின” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

”2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் அனைவரின் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இது யாருக்காவது கிடைத்ததா?. ஊழல், வேலைவாய்ப்புபற்றிப் பிரதமர் மோடி ஏன் வாய் திறப்பதில்லை?. அவர் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் யாருக்கு பலன்?” என  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : The Wire

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்