Aran Sei

ரபேல் ‘வாட்ச்’க்கு பில் எங்கே? – பத்திரிகையாளர்களை மிரட்டிய அண்ணாமலை பதில் சொல்லாமல் நழுவல்

கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கேள்வி கேட்ட ஒவ்வொரு செய்தியாளரையும் ஆவேசமாக மிரட்டும் தொனியில் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காயத்ரி ரகுராம் நேற்றைய தினம் பாஜகவிலிருந்து விலகினார். அவர் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

‘அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ – தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

இந்நிலையில் இன்றைய தினம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அதில், காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளாரே அது குறித்து உங்கள் பதில் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “என்னுடைய கொள்கை என்னவெனில் கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்க என வாழ்த்துவது எனது குணம். கட்சியிலிருந்து வெளியே செல்லும் நபர்கள் என்னையோ கட்சியையோ புகழ்ந்து பேசி செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவருடைய கருத்துகளை அவர் கூறியுள்ளார். பாஜகவில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அண்ணாமலையின் கீழ் உள்ள வார் ரூமில் இருந்து பெண்கள் மீது அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது – காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

ஒருவருக்கு கட்சியில் இருக்க பிடிக்கவில்லை என்றால் எதையாவது சொல்லிவிட்டுத்தான் செல்வார்கள். இதனால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. காயத்ரியின் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். யார் என் மீது குற்றச்சாட்டை முன் வைத்தாலும் என் பதில் மவுனம்தான். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவு எடுக்கட்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உள்ளது நாள் தருகிறேன் அதை நீங்கள் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டார் அண்ணாமலை. இதனால் வெறுத்துப்போன புதிய தலைமுறை தொலைக்காட்சி பத்திரிகையாளர், “ஒவ்வொரு முறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் ஆனால் ஆதாரத்தைத் தர மறுப்பது ஏன்” என்று பதிலுக்கு கேள்வி கேட்டார்.

அமேசானில் ரூ.345 க்கு கிடைக்கும் காது கேட்கும் கருவிக்கு ரூ.10000 பில் எழுதிய அண்ணாமலை – நான் கூறியது தவறுதான் என அண்ணாமலை விளக்கம்

இந்த கேள்வியால், ஆவேசமாக கோபப்பட்ட அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரம் உள்ளது அதை ஒளிபரப்புவீர்களா என்று புதிய தலைமுறை செய்தியாளரிடம் கேட்டார். நான் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் அரை மணி நேரம் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். புதிய தலைமுறை செய்தியாளரிடம் இப்போது நான் ஆதாரங்களை தருவேன் அவர் அதை அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்து விட்டு வந்து அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். நான் கொடுக்கும் ஆதாரங்களை போடாமல் ஒரு கட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கே வந்து கேட்கக்கூடாது.

நான் பிஜிஆர் ஆதாரத்தை பிரஸ்மீட்டில் கொடுத்தும் அதை நீங்கள் ஒளிபரப்பு செய்ய வில்லை. சும்மா வந்து கேள்வி கேட்டு கதை விடக்கூடாது. நான் கொடுக்கும் ஆதாரத்தை போடாமல் முதலமைச்சர் டீ குடித்தார், காபி குடித்தார், முதலமைச்சர் சைக்கிளில் போகிறார் என்று தானே செய்தி போடுகிறீர்கள். நீங்க வாங்க நான் ஆதாரம் தருகிறேன் அதை ஒளிபரப்ப வேண்டும். முதலில் பிஜிஆர் எனர்ஜி பற்றிய ஆதாரம் தருகிறேன் வரிசையாக ஒவ்வொன்றாக தருகிறேன் என்ற அண்ணாமலையின் கோபம், கேள்வி கேட்ட யூடியூப் நிருபர் ஒருவர் மீது அடுத்ததாக திரும்பியது.

ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார் – அண்ணாமலையை கிண்டலடித்த செந்தில் பாலாஜி

இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் உங்கள் ரபேல் வாட்ச்சில் ரெக்கார்டிங் ஆப்ஷன் இருக்கிறதாமே என கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை உடனே அந்த வாட்சை கழற்றி அந்த செய்தியாளரிடம் கொடுத்தார். பின்னர் இந்த வாட்சை நீங்கள் 24 மணி நேரம் உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். அதை கழற்றி பாருங்கள். அதில் கேமரா இருக்கிறதா, ரெக்கார்டர் இருக்கிறதா என பாருங்கள். எங்கு வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என்று அண்ணாமலை கூறியதற்கு எங்களுக்கு ரபேல் வாட்ச் எல்லாம் வேண்டாம், அதற்கான பில் மட்டும் காட்டுங்கள் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு கோவமான அண்ணாமலை பத்திரிகையாளர்களை பார்த்து ஒருமையில் பேச ஆரம்பித்தார்.

40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காக யூடியூப் சேனல்காரர்கள் கேள்வி கேட்கிறீர்கள். என் பெயர் அண்ணாமல் நான் பாஜக, அதே மாதிரி என்னிடம் கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் பத்திரிக்கையாளர் என சொல்ல கூடாது. சேனல் பெயரையும் செய்தியாளர் பெயரையும் கூறி விட்டு கேள்வி கேளுங்கள் என்று கொந்தளித்தார் அண்ணாமலை. என்னுடைய செய்தியை கவர் செய்ய வேண்டும் என்று நான் யார் காலிலும் விழவில்லை. இனிமேல் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் பாஜக அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க வரவேண்டாம்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படிக்கும் அண்ணாமலையின் கோமாளித்தனம் – செந்தில்பாலாஜி கிண்டல்

இந்த கொந்தளிப்பு சூழ்நிலையை தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து புதிய தலைமுறை செய்தியாளரிடம் பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரங்களை கொடுத்துள்ளார் அண்ணாமலை. இதையடுத்து, நீங்கள் நேரடியாக விவாதத்திற்கு வாருங்கள் என்று புதிய தலைமுறை செய்தியாளர் அழைத்துள்ளார். ஆனால் என்னையே விவாதத்திற்கு அழைக்கிறீர்களா? எனக்கு பதில் நாராயணன் திருப்பதிதான் விவாதத்தில் வந்து பேசுவார் என்று அண்ணாமலை கூறியதாகவும், தன்னை ஒருமையில் பேசியதாகவும் குற்றம் சாட்டினார் புதிய தலைமுறை செய்தியாளர். ஆதாரத்தை வெளியிடுவேன் என்று கூறியவர் விவாதத்திற்கு வர மறுப்பது ஏன் என்றும் செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு காணொளியில், அண்ணாமலை அறைக்குள் சென்று நடந்தவை குறித்து விளக்கமளிக்க ஒரு செய்தியாளர் போனபோது அந்த செய்தி தொலைக்காட்சி நிருபரிடம் நீங்கள் கவர் செய்யாவிட்டால் போங்க என விரட்டும் தொனியில் அண்ணாமலை பேசியதும் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதனால் உரிய கேள்விக்கு பதில் கிடைக்காமல் பத்திரிக்கையாளர் சந்திப்பின் நோக்கமே சிதறிவிட்டதாக பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் பத்திரிக்கையாளர் அமைப்புகளும் இந்த மிரட்டல்கள் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Annamalai arrogance towards reporters shows his real face | Annamalai Latest Press Meet | Annamalai

ரபேல் ‘வாட்ச்’க்கு பில் எங்கே? – பத்திரிகையாளர்களை மிரட்டிய அண்ணாமலை பதில் சொல்லாமல் நழுவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்