ராணுவத்தில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ராணுவத்தின் மாண்பை குறைக்கும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”இந்தியாவுக்கு இரண்டு பக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் நிலவும் சூழலில், அக்னிபத் திட்டம் நமது படைகளின் செயல்திறனைக் குறைக்கும். ராணுவத்தின் மாண்பு, பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தை சமரசம் செய்யும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பத்’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார்: ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – சாலை, ரயில் போக்குவரத்தை முடக்கிய இளைஞர்கள்
’அக்னி பாத்’ திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் வீரர்களின் போராடும் எண்ணத்தில் தொய்வு ஏற்படும். இதனால் ஆபத்து நேரலாம் என்று எச்சரிக்கின்றனர்.
அக்னிபத் திட்டத்திற்கு இரண்டு பரிந்துரைகளை முன்னாள் மேஜர் ஜெனரல் பிஎஸ் தனோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”அக்னி பத் திட்டத்தில் இரண்டு விஷயங்களை மேம்படுத்தலாம் என நினைக்கிறேன். ஒன்று, புதிதாக பணியில் சேர்வோருக்கான பணிக்காலத்தை 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இரண்டாவது, ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோரை மீண்டும் பணியில் சேர்ப்பதை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்த டெல்லி காவல்துறை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
அதேபோல ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் யாஷ் மோர், ”ராணுவ வாழ்க்கையும் பணியும் பணத்தால் மதிப்பிடக்கூடியது அல்ல. அதில் சிக்கனம் செய்து அரசு செலவினங்களைக் குறைப்பதும் நல்ல யோசனை அல்ல” என்று கூறியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் நலவாரிய உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ”அக்னி பத் திட்டம் என்பது தனிப்பட்ட ராணுவத்தை உருவாக்குவது போன்றது என்று எச்சரித்துள்ளார். 4 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கேங்ஸ்டர்களாக மாறினால் அரசு என்ன செய்யும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு
ஒன்றிய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான விகே சிங் கூறுகையில், ‘அத்திட்டம் பற்றி முழு விவரம் எனக்குத் தெரியவில்லை. அதை நடைமுறைப்படுத்தினால் தான் அதைப் பற்றி முழுமையாகத் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.
இந்திய ராணுவ பட்ஜெட்டில் நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. அக்னி பத் திட்டத்தில் ஓய்வூதியம் கிடையாது என்பதால் இந்த தொகை சேமிக்கப்பட்டு முப்படைகளையும் நவீனப்படுத்த முடியும் என்பதாலேயே இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Source: Hindutamil
அர்ஜுன் சம்பத்துகளை சங்கிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் | Karu Palaniappan Speech | Afreen Fatima
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.