Aran Sei

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? – காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மாநில செயல் தலைவருமான சதீஸ் ஜார்கிகோளி கலந்து கொண்டார்.

பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

அந்நிகழ்வில் பேசிய அவர், “பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இந்து, இந்துத்துவா என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் இந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது. அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்தது. இந்து சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?.

இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது. அந்த சொல் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள இணையத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். இந்து என்ற சொல் இந்தியாவை சேர்ந்தது அல்ல என்று பேசியுள்ளார்.

சதீஸ் ஜார்கிகோளியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்தை பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் மேலிடமும் கண்டித்துள்ளது.

ஒடிசா: சூரிய கிரகணத்தின் போது பிரியாணி சாப்பிடும் திருவிழா நடத்தியவருக்கு கொலை மிரட்டல் – இந்துத்துவ அமைப்புகளின் புகாரால் 4 வழக்குகள் பதிவு

இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்து என்பது நமது வாழ்க்கை. அது உண்மையும் கூட. ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கை அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் கட்டமைத்துள்ளது. இது தான் இந்தியாவின் சாராம்சம். இந்து குறித்து சதீஸ் ஜார்கிகோளி கூறிய கருத்து துரதிர்ஷ்டமானது. அவரது கருத்தை நிராகரிக்கிறேன். மேலும் அந்த கருத்தை கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்து என்ற சொல் தொடர்பாக நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. அதனை தவறானது என்று யாராவது நிரூபித்தால் நான் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று அவர் சவால் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சதீஸ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.

Source : NDTV

What is Manusmiriti | Thinakara Gnanagurusamy Interview | Thirumavalavan | RSS |bjp |

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? – காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்