அடுத்த ஒராண்டிற்குள் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில், 2014 ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, உறுதியளிக்கப்பட்ட 2 கோடி வேலைவாய்ப்புகள் வாக்குறுதி என்ன ஆனது என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக நாடாளுமன்ற வருண் காந்தி பகிர்ந்த வேலைவாய்ப்புத் தகவல்களை மேற்கோள் காட்டிய பேசியபிறகு பிரதமரின் அறிவிப்பு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
”நாங்கள் பிரதமரிடம் கேட்க விரும்புகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று 2014 ஆண்டு நாட்டிற்கு உறுதியளித்தது உண்மையல்லவா?. உண்மையென்றால், நீங்கள் எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
”நாடாளுமன்றம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். 16 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது. நீங்கள் ஏன் அதை வழங்கவில்லை? என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை நோக்கி அரசுத் துறைகள் செயல்பட வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கலவரக்காரர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு மேற்கொண்ட புல்டோசர் இடிப்பு நடவடிக்கை குறித்து பேசிய ஓவைசி, “உத்தரப்பிரதேச முதல்வர் ஓரு சூப்பர் தலைமை நீதிபதியாக மாறிவிட்டார். அவரது நீதிமன்றத்தில், அவர் மக்களை தண்டிக்கவும், வீடுகளை இடித்துத் தள்ளவும் செய்வார்.” கூறியுள்ளார்.
தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை பாஜக தேடுகிறது – ஓவைசி கிண்டல்
பிரக்யாராஜில் இடிக்கப்பட்ட அஃப்ரீன் பாத்திமாவின் வீடு, அவரது தாயாரின் பெயரில் இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
லக்கிம்பூர் கேரி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆஷித் மிஸ்ராவின் வீட்டை இடிக்க யோகி துணிவாரா என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவை சொந்தம் கொண்டாட உரிமையுள்ளவர்கள் திராவிடர்களும் பழங்குடிகளும்தான் – ஓவைசி
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெளிப்படையான வெறுப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இஸ்லாமியர்களுக்குக் கூட்டு தண்டனையைப் பாஜக வழங்குகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள், ஆதாரமிருந்தால், நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஓவைசி தெரிவித்துள்ளார்.
Source: The New Indian Express
புல்டோசர் பாபாவும், புல்டோசர் மாமாவும் | Aransei Explainer | Yogi Adityanath | Afreen | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.