பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மேற்கு வங்கத்தில் ரத யாத்திரையை தொடங்கி வைத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர்களைக் கவரும் விதமாகப் பாஜக ரத யாத்திரையை அறிவித்துள்ளது.
மாற்றத்திற்கான ரதயாத்திரையெனப் பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையின் மூலம் மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் பாஜக உறுப்பினர்கள் பயணம் செய்து, ஊழலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இன்று ஜே.பி.நட்டாவால் மால்டாவில் தொடங்கப்படும் ரத யாத்திரை மார்ச் மாதம் பிரதமர் உரையுடன் கொல்கத்தாவில் நிறைவு பெற இருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த யாத்திரையை, தொடங்கி வைப்பதற்காகப் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மேற்கு வங்கத்தின் மால்டா பகுதிக்குச் சென்றுள்ளார். அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
বাংলায় তোলাবাজি, তোষণ, দুর্নীতির দিন এবার সমাপ্ত হবে।
বাংলার মানুষ সোনার বাংলা গঠনের জন্য প্রস্তুত। #PoribortonYatra pic.twitter.com/B7SP7zb1kV
— BJP Bengal (@BJP4Bengal) February 6, 2021
இது தொடர்பாக மேற்கு வங்க பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், இத்தனை நாட்களாக வங்காளத்தில் இருந்த ஊழல், மிரட்டல் போன்றவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் தங்க வங்காளத்தை உருவாக்கத் தயாராகி விட்டதாக ட்விட் செய்துள்ளது.
பாஜகவை பந்தாடும் திரிணாமுல் – பாஜக அலுவலகத்திற்கு எதிரே மேடை அமைத்து போராட்டம்
முன்னதாக, மேற்கு வங்க அரசு ரத யாத்திரைக்கு அனுமதியளிக்க மறுப்பதாகப் பாஜக குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த திரிணாமூல் அரசு, அரசாங்கம் ரத யாத்திரையை தடை செய்யவில்லை என்றும் இதைத் தடை செய்யக் கோரி ஒருவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் என்றும் கூறியுள்ளது.
மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேலும், ரத யாத்திரை மேற்கொள்ளப்படும் அந்தந்தப் பகுதிகளில் அனுமதியை பாஜக பெற்றுக் கொள்ள வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
‘பாஜக தோல்வியுற்றால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலதான் செய்வார்கள்’ – மம்தா பானர்ஜி
இதற்கு, பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா, “பாஜக உலகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சி. நாங்கள் அமைதியான அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. யாத்திரை திட்டமிட்டப்படி நடக்கும்” என தெரிவித்ததாக தி இந்துவின் செய்தி கூறுகிறது. அவர் தெரிவித்தப்படி இன்று மால்டா பகுதியில் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையினால் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் கலவரம் ஏற்பட்டதும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.