மேற்கு வங்க மாநிலம் ஹவுராவி துலாகரில் உள்ள பள்ளியில் ஹிஜாப் அணிந்து அந்த மாணவர்களுக்கு எதிராக மற்றும் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி உடைமைகளை மாணவர்கள் சேதப்படுத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், காவல்துறையினரும், விரைவு அதிரடிப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
I love Hijab: ஹிஜாப் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடிய இஸ்லாமியப் பெண்கள்
இந்த சம்பவத்திற்கு பிறகு, பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், மாணவர்கள் இனி பள்ளி சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஹிஜாப் அணிவதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிவதை ஆதரித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா கூறுகையில், “சீக்கியர் தலைக்கவசத்துக்குப் பதிலாக தலைப்பாகை அணிந்தால் அரசியல் சட்ட விதிகள் மீறப்படவில்லை. சட்டப்படி அனுமதி உண்டு, பெண் ஹிஜாப் அணிந்தால், அவள் எதிர்க்கக் கூடாது. அதே போல் மாணவர்கள் காவித்துண்டு அணிவதையும் எதிர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Source : the print
Annamalai Used Suriya Shiva to defeat Senior leaders of BJP | Daisy Saran | Gayathri Raghuram
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.