Aran Sei

மேற்கு வங்கம்: இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல் அமைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மகாத்மா காந்தியை அவமதிக்கும் உருவம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுப் படுகொலை செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம் இது. அதுவும் நாட்டின் தேசப் பிதாவையே படுகொலை செய்த காரணத்தால் ஆர்எஸ்எஸ்.இயக்கம் முதன் முதலாக தடை செய்யப்பட்டது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி: மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இந்து மகாசபை மாநிலத் தலைவர் – கைது செய்த காவல்துறை

இன்றளவும் மகாத்மா காந்தியை விமர்சிப்பது இந்துத்துவா இயக்கங்களின் கொள்கையாக உள்ளது. காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்வதும் தொடருகிறது. மகாத்மா காந்தியை பொம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது போன்ற காட்சிகளை இந்து மகா சபை ஆதரவாளர்கள் வெளியிட்டும் வருகின்றனர்.

இதன் உச்சமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகா சபையினர் அமைத்த நவராத்திரி பந்தல் சர்ச்சையாகி உள்ளது. நவராத்திரி பூஜை கொண்டாட்டங்கள், மேற்கு வங்க மாநிலத்தின் கலாச்சார அடையாளம். அதுவும் நவராத்திரி பந்தல்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நவராத்திரி பந்தல்களில் ஒன்றை இந்தமகாசபை அமைத்திருந்தது.

மசூதிக்குள் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவிப்பு – மதுராவில் ஊரடங்கு அமல்

இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தியை எருமைத் தலை கொண்ட மகிஷாசுரன் போல இந்து மகாசபை சித்தரித்திருந்தனர். இது தொடர்பான பட்ங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு இதில் தலையிட்டதால், கொல்கத்தாவில் நவராத்திரி பந்தலில் மகாத்மா காந்தியை விமர்சித்து வைக்கப்பட்டிருந்த மகிஷாசுரன் உருவம், அகற்றப்பட்டது.

இதுகுறித்து இந்திய இந்து மகாசபாவின் மேற்கு வங்க மாநிலப் பிரிவின் செயல் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கையில், “நாங்கள் காந்தியை உண்மையாகவே அசுரனாகப் பார்க்கிறோம். அவர்தான் உண்மையான அசுரர். அதனால்தான் அவரை இப்படிச் செய்தோம்.

‘கோட்சே தூக்கிலிடப்பட்ட சிறையில் எடுத்த மண்ணைக் கொண்டு கோட்சேவுக்கு சிலை’- இந்து மகாசபை அறிவிப்பு

ஒன்றிய அரசு மகாத்மா காந்தியை கொண்டாடுகிறது. எனவே, நாங்கள் அத்தகைய கருத்தை அகற்றி மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காந்தியை எல்லா இடங்களிலிருந்தும் அகற்றி, அவருக்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

புராணங்களின்படி, மகிசாசூரனின் தீய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர துர்கா தேவி அவதாரம் எடுத்து காலில் வைத்து மகிசாசூரனை வதம் செய்தார். அந்த மகிசாசூரன் இடத்தில் காந்தி சிலை வைத்தது மிகவும் கண்டனத்திற்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துர்கா தேவியின் காலுக்கு இடையில் காந்தி சிலை இருந்ததை புகைப்படம் எடுத்து பத்திரிகையாளர் இந்திரதீப் பட்டாச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

‘பண்டிட் நாதுராம் கோட்சே வாழ்க’ – காந்தி பிறந்தநாளில் கோட்சேவுக்கு மாலையிட்டு மரியாதை செய்த இந்து மகாசபை

தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இது தேசத்தந்தைக்கு அவமானம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும். இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்லும்? இவர்கள் காந்திஜியைக் கொன்றவரின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

Source : the wire

Nathan Decodes Shakha RSS Parade | Nathan | Vaathi Raid EP – 2 | Modi | Annamalai | BJP | Aransei

மேற்கு வங்கம்: இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்