மேற்கு வங்க ஆளூநர் ஜெகதீப் தன்கர் ‘இந்திய அரசியல் அமைப்பிற்கு’ எதிராக செயல்பட்டு வருவதாக சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆளுநரின் செயல்பாடுகள் மேற்வங்க மாநிலத்தில் அரசியல் அசாதாரண சூழலுக்கு வழிவகுப்பதால் உடனடியாக இந்திய ஒன்றிய அரசு திரும்ப அழைக்கவேண்டுமெனவும் சிவசேனா கட்சி கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேற்குவங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரின் செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்துள்ள சிவசேனா, “மேற்வங்கத்தில் அசாதாரணமான, ஓய்வற்ற சூழலை உருவாக்குகிறார். எனவே அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானார்ஜீக்கு தனது ஆதாரவை சிவசேனா தெரிவித்துள்ளது.
இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்
நாரதா லஞ்சப்புகார் வழக்கில் 4 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களைக் மத்திய புலனாய்வுத் துறை கைதுசெய்தது குறித்து தெரிவித்துள்ள சிவசேனா, ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’ என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாமனாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.
மேலும், “2014 ஆம் ஆண்டு நாரதா லஞ்சப்புகார் வழக்கில் சம்பந்தப்பட்ட முகுல்ராய், சுவேது அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலில் மம்தா பானர்ஜீயை எதிர்த்து பாஜகவில் சேர்ந்தவுடன் அவர்கள் சுத்தமானவர்களாக ஆகிவிட்டார்களா” என்று சிவசேனா கேள்வியெழுப்பியுள்ளதாகவும் அந்த செயதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.