Aran Sei

’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்; பேச்சை தவிர்த்த மம்தா: பிரதமர் முன்பாக நடந்த சம்பவத்திற்கு எழும் கண்டனம்

பிரதமர் மோடி கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அழைக்கப்பட்ட போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பட்டதால், மம்தா பானர்ஜி கோபமைந்துள்ளார்.

நேற்று (ஜனவரி 23) மாலை, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவகத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டுள்ளார். அப்போது, கூட்டத்தில் ஒரு பகுதியினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “என்னை இங்கு அழைத்த பின்னர் என்னை அவமதிக்க கூடாது. இது ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி இல்லை. அரசு நிகழ்ச்சிக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. நீங்கள் ஒருவரை அரசு நிகழ்ச்சிக்கு அழைத்தால், நீங்கள் அவர்களை அவமதிக்கக் கூடாது.”  என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

மேலும், “நான் எதையும் பேச விரும்பவில்லை. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமருக்கும், மத்திய அமைச்சருக்கும் என் நன்றிகள். ஜெய்ஹிந்த், ஜெய் பெங்காள்.” என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடியின் அடுத்த இருக்கையில அமர்ந்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன், “கண்ணியம் என்பது மரியாதை தருவதற்கு தகுதியான நிலை அல்லது தரம் என்று பொருள். அதனால், நீங்கள் (பாஜக) ‘கண்ணியத்தை கற்பிக்க முடியாது. மேலும், கண்ணியமாக இருக்க லம்பன்களுக்கு நீங்கள் கற்பிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேலிசெய்யும் திரிணாமுல்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “இந்த அரசாங்கம் (மத்திய அரசு) ஜனநாயகத்தின் அனைத்து புனிதத்தன்மையையும் முற்றிலுமாக மீறியுள்ளது. நம் நாட்டில் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகம் இருக்கும் வரை, ஒரு அரசு நிகழ்ச்சியில் மதரீதியிலான முழக்கங்களை எழுப்பக்கூடாது. பாஜகவைப் போன்றவர்களால் மட்டுமே இதைபோல முட்டாள்தனத்தை செய்ய முடியும். ” என்று விமர்சித்துள்ளதாக ‘குவிண்ட்’ இணையளம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமான் போஸ் கூறுகையில், “மம்தாவுக்கு நடந்த சம்பவம் மாநிலத்துக்கே பெரும் அவமானம். அரசு நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகளாக மாறாமல் இருக்க இனிமேல் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்; பேச்சை தவிர்த்த மம்தா: பிரதமர் முன்பாக நடந்த சம்பவத்திற்கு எழும் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்