Aran Sei

நிலுவைத் தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காததை கண்டித்து ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

துர்காபூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”ஒன்றிய அரசு மோசமான விளையாட்டை விளையாடுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏழை மக்கள் ஊதியம் பெற சிரமப்படுகிறார்கள். இந்த திட்டத்திற்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ரூ. 6 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசிடம் உதவியைக் கேட்கவில்லை என்று சொன்ன அவர், ”எங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகை தான் எங்களுக்குத் தேவை. பங்களா ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வர வேண்டிய நிலுவைத் தொகையை விடுவிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

”மாநில அரசுகளிடையே பாரபட்சம் காட்டுவது ஏன் என்று நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கேள்விக் கேட்கும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும். இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு, மகளிர் பிரிவு மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

”100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில், மேற்கு வங்க மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 96 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Source: NDTV

தமிழ்நாட்டை குறிவைக்கும் அண்ணா ஹசாரேக்கள் I Maruthaiyan Interview I Vikatan I GSquare Case I Aransei

 

 

நிலுவைத் தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்