Aran Sei

மேற்கு வங்கம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர்களிடம் பணத்தைப் பெற்று பேரணியை நடத்துகிறது பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை  கொண்டுதான் பாஜக பேரணி நடத்துவதாக 7 திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணியை நட்த்துகிறது. இதற்காக 7 ரயிகளை பாஜக எடுத்துள்ளது.

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர்.

பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவருமான ராகுல் சின்ஹா ​​கூறும்போது, அனைத்து ரயில்களும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டன அல்லது சில மணிநேரங்களில் தங்கள் இடங்களுக்குப் வந்தடையும். பேரணியில் கலந்துகொள்ளும் தொடர்களை திரிணாமுல் காங்கிரஸ் தடுக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்

இந்நிலையில், பாஜக தொண்டர்களை பல இடங்களில் காவல்துறையினர் வரவிடாமல் தடுத்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், ராணிகஞ்ச் ரெயில் நிலையத்திற்கு வெளியே பாஜக தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் பலரை காவல்துறையினர் தடுப்பு காவலுக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர்.

இதேபோன்று கொல்கத்தா செல்வதற்காக போல்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அக்கட்சி தொண்டர்களையும் காவல்துறையினர் தடுத்தபோது மோதல் வெடித்துள்ளது. இதில், தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் அபிஜித் தத்தா கூறும்போது, துர்காப்பூர் ரெயில் நிலையம் அருகே எங்களுடைய 20 தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ரெயில் நிலையம் செல்வதற்கான வழிகளையும் அவர்கள் அடைத்து விட்டனர். இதனால், வேறு சில வழிகளை பயன்படுத்தி நான் வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கேரளாவில் 18 நாட்கள், உ.பி.யில் 2 நாட்கள்: பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

இப்பேரணி குறித்து ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜாய் பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், “நாட்டை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை பாஜக பெற்றுள்ளது. அந்த பணத்தை தனது நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துகிறது. எனக்கு தெரிந்த வரையில் பாஜக. 2021 சட்டமன்ற தேர்தலை யொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டவில்லை. தற்போது ஒவ்வொரு ரயிலிலும் 11 பெட்டிகள் மற்றும் 700-800 இருக்கைகள் உள்ளன. அதாவது ஏழு ரயில்களில் 5,000-5,500 பேர் வரலாம். ஒவ்வொரு ரயிலிலும் ஏறும் ஒவ்வொருவருக்கும் பாஜக ₹ 3,000-4,000 செலவழிக்கிறது. கொரோனா நோய்க்கு பிந்தைய சூழ்நிலையில் மக்களுக்கு நிதி உதவி செய்ய இந்த பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Source: ndtv

Rooster Rahul decoding the lies of Karthik Pillai K Tv in Kallakurichi Sakthi School issue | Aransei

மேற்கு வங்கம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர்களிடம் பணத்தைப் பெற்று பேரணியை நடத்துகிறது பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்