பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் அத்தியாவசியப் பொருட்களின் தினசரி விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுவதாக ஒன்றிய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
“இன்று காஸ் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது பார்த்தீர்களா? எங்கே உஜ்ஜவாலா திட்டம்? காற்றில் காணாமல் போய்விட்டது. மீண்டும் தேர்தல் வரும்போது மற்றொரு ‘உஜ்ஜவாலா திட்டம், தனி மாநிலம் உருவாக்குவோம் என வாக்குறுதி தருவார்கள்.
“தேர்தலுக்கு முன் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள். இப்போது என்ன நடக்கிறது, நாட்டின் தற்போதைய நிலை மற்றும் விலைவாசி உயர்வு சாமானியர்களை எவ்ளவு பாதிக்கிறது என்பதைப் பாருங்கள்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜஹாங்கீர்புரி: காவல் துறைக்கு பயந்து ஊரிலிருந்து வெளியேறும் இஸ்லாமிய இளைஞர்கள்
மத்திய அரசு நலத் திட்டங்களுக்கு நிதியை வெளியிடவில்லை என்றும், மாநிலங்களுக்கு கோதுமை வழங்குவதை நிறுத்தியுள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
Source: Thenewindianexpress
Nupur Sharma வ ஏன் இன்னும் கைது பண்ணல? Aloor Shanavas Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.