Aran Sei

மேற்கு வங்கம்: தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக ஆளுநருக்கு பதில் கல்வி அமைச்சரை நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

Credit : The New Indian Express

ளுநருக்கு பதிலாக மாநில கல்வி அமைச்சரை தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக நியமிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது.

ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு பதிலாக மாநில கல்வி அமைச்சரை தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக மாற்றும் மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, 2022 இன்று அறிமுகப் படுத்தப்பட்டபோது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆதலால் இந்த மசோதா குறித்து சட்டசபையில் வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி: மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

மாநில அரசு நடத்தும் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மாற்றுவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேறிய சில நாட்கள் கழித்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source : india today

Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma

மேற்கு வங்கம்: தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக ஆளுநருக்கு பதில் கல்வி அமைச்சரை நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்