மேற்கு வங்கத்தில் காவல்துறையினரிடம் கொடுத்த பாலியல் புகாரை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் பாலியல் வன்புணர்வு செய்து விடுவோம் என்று முகமூடி அணிந்த 2 ஆண்கள் மிரட்டியதால் பயந்து போன 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்து ஒரு 14 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த சிறுமி கூச்சல் போட்டதால் அந்த நபர் அந்த வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் இது சம்பந்தமாகப் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் பிறகு அவர் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி, அப்பெண் தனது பாலியல் புகாரை திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து பயந்து போன சிறுமி அடுத்த நாள் தீக்குளித்துள்ளார். இதன்பின்பு 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (ஏப்ரல் 25) அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜல்பைகுரி காவல் கண்காணிப்பாளர் தேபர்ஷி தத்தா தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் குடும்பத்தினர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : The New Indian Express
இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது – ஆசிரியர் கீ வீரமணி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.