மத்திய பிரதேச அரசின் தற்போதைய இடிப்பு முயற்சிக்கு எதிராக ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமிதாபா குப்தா தாக்கல் செய்த பொதுநல மனுவை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது, வன்முறை வெடித்தது. இவ்வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். சில கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11ஆம் தேதி அன்று, வன்முறைக்குக் காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளையும் கடைகளையும், மத்தியப் பிரதேச பாஜக அரசு இடித்துத் தள்ளியது.
இந்த இடிப்பு சம்பவம் குறித்து வழக்கறிஞர் அமிதாபா குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யும் போது, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற அமர்வு, “இந்த மனுவை பொது நல வழக்காக கருதுவது பொருத்தமாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட நபர்களின் குறிப்பிட்ட வீடுகள் இடிக்கப்பட்டதாக மனுதாரரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அந்த நபர்களுக்கு சட்டப்படி தெரிந்த விதத்தில் தற்காத்துக் கொள்ள சட்டப்பூர்வ உரிமை உண்டு. மனுதாரர் சார்பில் இந்த மனுவை விசாரிப்பதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை. அதன்படி, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டது எந்த குழுவையும் இலக்காகக் கொண்டது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
source: newindianexpress
இசைஞானி இளையராஜாவை எப்படி புரிந்துகொள்வது..
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.