குற்றவாளிகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை காவல்துறை எடுப்பது பற்றி ஒன்றிய அரசு புதிதாய் கொண்டு வந்துள்ள குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதிகளுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கை வழக்கறிஞர் ஹர்ஷித் கோயல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.
இந்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் அமித் மகாஜன் கூறியதற்கு பதிலளித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த பொதுநல வழக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
“குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதிகளை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த புதிய விதிகள் எதேச்சதிகாரமானவை, அரசியலமைப்பிற்கு முரணானவை, சட்டவிரோதமானவை, இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகின்றன” என்று வழக்கறிஞர் ஹர்ஷித் கோயல் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்
தனிநபரின் சுதந்திரம், தனியுரிமைக்கான உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவை இந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதிகள் மீறுகின்றன என்று வழக்கறிஞர் ஹர்ஷித் கோயல் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்துவதே தவறா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.