ஹிஜாப் அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று உலக குத்துச்சண்டை சாம்பியனான நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
“ஹிஜாப் அணிவது முழுக்க முழுக்க ஒருவரின் சொந்த விருப்பம் தொடர்பானது. ஒருவரின் விருப்பங்களைப் பற்றி என்னால் கருத்து கூற முடியாது. எனக்கென்று சொந்த விருப்பம் உள்ளது. நான் ஹிஜாப்பை அணிய விரும்புகிறேன். அத்தகைய ஆடைகளை அணிவதால் பிறர் என்ன சொல்வார்கள் என்று நானும் என் குடும்பத்தினரும் பொருட்படுத்தவில்லை. ”என்று NDTV க்கு அளித்த அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
வரதட்சணை கொடுமை: விஸ்மயா தற்கொலை வழக்கு – கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பு
“ஹிஜாப் அணிந்து தங்கள் மதத்தை பின்பற்ற விரும்பினால், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் ஹிஜாப் அணிவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவர்களின் சொந்த விருப்பம். நான் அதில் சரி, தவறு என்று சொல்ல ஏதும் இல்லை” என்று நிகத் ஜரீன் கூறினார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது இந்திய அளவில் பேசு பொருளானது. ஹிஜாப்புக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பினர் என்பது நினைவு கூரத்தக்கது.
Source: NDTV
LIC யை திட்டமிட்டு அழிக்கும் Nirmala Sitharaman
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.