இந்திய அரசியலமைப்பின் கீழ் ஹிஜாப் அணிவதைத் தடுக்கும் எந்த சட்டமும் இல்லை என்று ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஹிஜாப் அணிவது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 இன் கீழ் பாதுகாக்கப்படவில்லை” என்று கர்நாடக அரசின் வாதம் “முற்றிலும் தவறானது” என்று மாணவிகள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிட்டார்.
கர்நாடக அரசின் ஹிஜாப் தடை உத்தரவு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 ஐ மீறுவதாகவும், சுதந்திரமாக மதத்தைக் கடைப்பிடிக்கவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது என்று தேவதத் காமத் கூறியுள்ளார்.
ஹிஜாப் அணிவது என்பது “இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம்” என்று 2016 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பைக் குறிப்பிட்டுப் பேசிய தேவதத் காமத், சிபிஎஸ்சி அனைத்திந்திய முன் மருத்துவ நுழைவுத் தேர்வில் (AIPMT) 2 இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்ததையும் தேவதத் காமத் சுட்டிக்காட்டியுள்ளார்.
குர்ஆன் இன் 24 ஆம் அத்தியாயத்தில் ‘தி லைட்’ என்று அழைக்கப்படும் குமுர் (தலை முக்காடு) பற்றிக் குறிப்பிடுவதையும் தேவதத் காமத் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப்பை அகற்றனால்தான் பள்ளிக்குள் அனுமதி – நிர்பந்திக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள்
ஹிஜாபைத் தடை செய்வதற்காக கர்நாடக அரசு அமைத்த கல்லூரி மேம்பாட்டுக் குழு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரத்தோடு இருப்பதை கண்டித்த தேவதத் காமத், இந்த குழுவில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் கூட கர்நாடக அரசு தனது பொறுப்பை ஒரு மூன்றாம் தரப்பிடம் ஒப்படைத்துள்ளதை விமர்சித்துள்ளார்.
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும், இஸ்லாமிய பெண்கள் தங்களது பள்ளி சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதிக்கின்றன என்றும், அதையே இங்கும் அமல்படுத்தலாம் என்றும் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.