இஸ்லாமியர்கள் படிக்கும் மதரஸாக்களில் ஹிஜாப் அணிந்து செல்லுங்கள், அதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம்: முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஹிஜாபுக்கு ஆதரவாக கடிதம்
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரக்யா தாகூர் இவ்வாறு தெரிவித்துள்ளார். .
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.