Aran Sei

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

ந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் மீது கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை ‘சமத்துவமின்மை கொல்லும்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை#richயில் கீழ்க்கண்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் செல்வத்தை வைத்துக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்குப் போதுமான நிதியளிக்க முடியும்.

இந்தியாவின் முதல் 98 பணக்கார குடும்பங்கள் மீது விதிக்கப்படும் சொத்து வரி, உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமாக நிதியளிக்க முடியும்.

‘From Shadows to Stars’ – ரோகித் வெமுலா நினைவு நாள்

கொரோனா தொற்றுநோயின்போது இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் இருமடங்காயின. மேலும் அவர்களின் எண்ணிக்கையும் 39% அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது.

முதல் 10% பணக்காரர்களுக்குக் கூடுதலாக 1% வரி விதித்தால், கிடைக்கும் வருவாயை வைத்து 17.7 லட்சம் கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும். கொரோனா தொற்றுநோய் இரண்டாவது அலையின்போது பெருமளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெரும் பணக்காரக் குடும்பங்களுக்குச் சொத்து வரி வெறும் 1% விதித்தால் கூட இந்தியா தனது தடுப்பூசி திட்டச் செலவான ரூ. 50,000 கோடி ரூபாயைத் திரட்ட முடியும்.

“ஆனால் இதற்கு மாறாக, இந்தியாவில் வரிச் சுமை நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளின் தோள்களிலேதான் உள்ளது. மேலும் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்பதற்காகச் செல்வந்தர்கள் மீது ஒரு முறை கூட வரி விதிக்காமல் ஏழைகளுக்கு அபராதம் விதிக்கும் மறைமுக வரி வருவாய் மூலமே நிதி திரட்டி வருகிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

‘ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்தான் ரோஹித் வெமுலா’ – ராகுல் காந்தி

2019 செப்டம்பரில், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னரே, நரேந்திர மோடி அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான கார்ப்பரேட் வரியை 30% விருந்து 22% ஆகக் குறைத்தது, மேலும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரியை 25% லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது.

“இந்தக் கார்ப்பரேட் வரி குறைப்பால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளதாகவும்” ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை கூறியுள்ளது.

“கொரோனா தொற்றுநோயின்போது மறைமுக வரிகளை (ஜி.எஸ்.டி, கலால் வரி, சுங்க வரி மற்றும் VAT) அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் எவ்வாறு நேரடி வரிகளின் (வருமான வரி, பெருநிறுவன வரி) பற்றாக்குறையை ஈடுகட்டியது” என ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை கூறியுள்ளது.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடல்: அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் – சதீஷ் சாவன்

சொத்து சமத்துவமின்மை குறித்து, ஆக்ஸ்பாம் அறிக்கை கூறும் சில விஷயங்கள் :

இந்தியாவின் முதல் 142 பணக்காரர்கள் கிட்டத்தட்ட 53 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர், அதே சமயம் அவர்களில் முதல் 98 பணக்காரர்களிடம் 49 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இப்போது கடைநிலையில் உள்ள 55.5 கோடி ஏழை மக்களிடம் உள்ள கிட்டத்தட்ட அதே 49 இலட்சம் கோடி சொத்து தான் உள்ளது

முதல் 10 இந்தியப் பணக்காரர் ஒவ்வொருவரும் 7 கோடிக்கு மேல் செலவழித்தால் கூட அவர்களின் தற்போதைய செல்வத்தைத் தீர்க்க 84 ஆண்டுகள் ஆகும்.

முதல் 10% செல்வந்தர்கள் இந்தியாவின் தேசியச் செல்வத்தில் 45% த்தை குவித்துள்ளனர், அதே சமயம் மக்கள்தொகையில் கடைநிலையில் உள்ள 50% மக்களிடம் வெறும் 6% செல்வம் மட்டுமே உள்ளது‌.

“பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் செல்வ வரியை மீண்டும் அறிமுகப்படுத்தி, மேலும் அவர்களுக்குத் தற்காலிகமாக 1% கூடுதல் வரியை விதிப்பதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினரின் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான வருவாயை நாம் ஈட்ட முடியும்” என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியுள்ளது.

Source : The Wire

 

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்