Aran Sei

முதல் 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.65 லட்சம் கோடியாக 32 மடங்கு அதிகரிப்பு – போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

டப்பு ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த 100 பணக்காரர்களின் கூட்டுச் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கோடியிலிருந்து ரூ.65 லட்சத்து 34 ஆயிரத்து 404 கோடியாக 32 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் பங்கு வர்த்தக சூழல் கடந்த ஓராண்டுக்கு முன்பு வீழ்ச்சி கண்டிருந்தபோதும், இந்திய ரூபாய் மதிப்பு 10 விழுக்காடு அளவுக்கு சரிந்தபோதும் இந்த வளர்ச்சியானது எட்டப்பட்டு உள்ளது.

அதானியின் தினசரி வருமானம் ரூ.1612 கோடி – 2021-ல் அதானியின் சொத்து மதிப்பு 15 மடங்கு உயர்வு

இதன்படி, இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து கவுதம் அதானி நீடித்து வருகிறார். இதற்கு அடுத்து 2-வது இடத்தில் தொடர்ந்து முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார்.

போர்ப்ஸ் அறிக்கையின்படி, முதல் 10 இடத்தில் உள்ள பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ.31 லட்சத்து 44 ஆயிரத்து 681 கோடியாக உள்ளது. இந்த பணக்காரர்களின் பட்டியலில் 9 பெண்கள் இடம் பெற்று உள்ளனர்.

உலகப் பணக்காரர் வரிசை – இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் கௌதம் அதானி

இந்தியாவின் ஆண் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்து 200 கோடியாகவும், பெண் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 950 கோடியாகவும் உள்ளது.

Source : indiatimes

Hindi Theriyadhu Poda I History of Hindi Imposition detailed Explanation I Maruthaiyan Interview

முதல் 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.65 லட்சம் கோடியாக 32 மடங்கு அதிகரிப்பு – போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்