Aran Sei

இந்தியாவின் வளர்ச்சிக்கு இலவசக் கல்வியும் சுகாதாரமும் முக்கியம் – மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

ந்தியாவின் வளர்ச்சிக்கு இலவசக் கல்வி மற்றும் சுகாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தவை.  இந்த நலத்திட்டங்களை இலவசம் அல்லது “ரெவ்டி” என்றும் கூற முடியாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தரமான கல்வி ஒரு தலைமுறையில் வறுமையை ஒழிக்க உதவும் என்றார். கல்வி புரட்சியின் காரணமாக ஒரு ஏழையின் குழந்தை டெல்லியில் வழக்கறிஞர் அல்லது பொறியியலாளர் ஆக வேண்டும் என்று கனவு காணலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

முன்னதாக, கடந்த மாதம் உ.பி.யில் பண்டேல்கந்த் எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி “ இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்சிக்கு ஆபத்து. இதிலிருந்து அரசியல் கட்சிகள் வெளிவர வேண்டும்”எனத் தெரிவித்திருந்தார். அதற்கு மறைமுகமாக கெஜ்ரிவால்  பதில் அளித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் டெல்லியில் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடி ஏற்றி மக்களிடம் உரையாற்றினார். அப்போது,

உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மாற்ற, நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் ஒன்று சேர்வது அவசியம். நாம் ஒன்றாக இணைந்தோம், ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு விரட்டினோம். இன்று நாம் ஒன்றாகச்சேர்ந்தால், இந்தியாவை உலகின் முதல்நாடாக உயர்த்தலாம்.

சுதந்திரத்துக்குப்பின் பல நாடுகள் கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தியுள்ளன, பணக்காரநாடாக மாறியுள்ளன. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, டென்மார்க் நாடுகள் எவ்வாறு பணக்கார நாடுகளாக உள்ளன. தங்கள் நாட்டு மக்களுக்கு நல்ல கல்வி, தரமான மருத்துவவசதிகளை வழங்கினார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறுமைப்படுத்துகிறது பாஜக – சோனியா காந்தி விமர்சனம்

இதேபோல செய்து இந்தியாவையும் நாம் முன்னணி தேசமாக உயர்த்தலாம். ஒவ்வொரு இந்தியரும் தரமான கல்வி, மருத்துவ வசதி பெறும்போதுதான் மூவர்ணக் கொடி உயரத்தில் பறக்கும். இலவச கல்வி, மருத்துவம் ஆகியவை தேர்தல் இலவசங்கள் அல்ல. இவை இரண்டும் சேர்ந்து ஒரு தலைமுறையால் தேசத்தின் ஏழ்மையை விரட்டக்கூடியவை.

கல்விமுறை, மருத்துவ வசதிகள் ஆம் ஆத்மி அரசு வந்தபின் சீரமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் அரசுப்பள்ளியில் மாணவர்கள் நிலை மோமசமாகவும், அடிப்படை வசதிகள் இன்றி இருந்தது.

ஆனால், இன்று நாங்கள் அரசுப் பள்ளிகளை உருவாக்கியுள்ளது, அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் வழக்கறிஞராக, மருத்துவராக வர முடியும். டெல்லி மக்களுக்கு தரமான மருத்துவ வசதியை ஏற்படுத்தியுள்ளோம். நபர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் மருத்துவக்காக அரசு ஒதுக்குகிறது. இதேபோல 130கோடி இந்தியர்களுக்கும் 2.50லட்சம் கோடியில் நல்ல மருத்துவ வசதியை உருவாக்கலாம்.

தகைசால் தமிழர் விருது: விருது தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய தோழர் நல்லகண்ணு

நம்தேசம் சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப்பின்புதான் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது. 2ம் உலகப் போரில் ஜப்பான்அழிந்து, இப்போது நம்மைவிட முன்னேறி வருகிறது. நாமும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இந்தியர்கள் உலகிலேயே சிறந்த புத்திசாலிகள், கடினமான உழைக்கும் மக்கள். ஆனாலும் பின்தங்கி இருக்கிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார்.

Source: ndtv

மதவெறி அரசியலுக்கு சட்டரீதியான செருப்படி | ஸ்டாலின் சொன்னது சரிதான் | Tharasu Shyam | M K Stalin DMK

இந்தியாவின் வளர்ச்சிக்கு இலவசக் கல்வியும் சுகாதாரமும் முக்கியம் – மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்