ஆந்திர மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயரை மாற்றுவது தொடர்பாக அமலாபுரத்தில் நடந்த வன்முறை மோதல்கள் மற்றும் தீக்குளிப்பு சம்பவங்களுக்கு ஒரு நாள் கழித்து, ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்த ஊரில் அமைதி நிலவியுள்ளது. கோனசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை மாற்றும் திட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று ஆந்திர அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆந்திரபிரேதேசத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ல கோனசீமா மாவட்டத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேர்கரின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அமலாபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் படுகாயமடைந்தனர்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.சதீஷ் வீடு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.விஸ்வரூப்பின் வீட்டுக்கு வெளியே இருந்த மரச்சாமான்கள், காவல்துறை வாகனம், கல்வி நிறுவன பேருந்து ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
மாவட்டத் தலைமையகத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அமலாபுரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அண்டை பகுதிகளில் இருந்து ஒரு காவல்துறை இயக்குநர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாள உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தலைவர் கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
“செவ்வாய் ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்த தலித் குழுக்கள் அனுமதி கோரின. ஆனால் நாங்கள் எந்த போராட்டமும் நடத்த வேண்டாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினோம். வன்முறையில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபரையும் நாங்கள் அடையாளம் கண்டு வழக்குப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதனால் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியதில்லை. இதுவரை 7 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து பலரைக் கைது செய்துள்ளோம்” என்று கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டி கூறியுள்ளார்.
‘பாஜகவால் வஞ்சிக்கப்படும் ஓபிசி மக்கள்’ – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சரத் பவார் வலியுறுத்தல்
கோனசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை வைக்கும் திட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று ஆந்திர அரசு உறுதியளித்தது.
Source: Theindianexpress
ஒவ்வொரு மசூதியா கை வைக்கிறாங்க | Paguthari
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.