Aran Sei

‘இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்’ – கிராமவாசிகளின் உறுதிமொழி குறித்து சத்தீஸ்கர் காவல்துறை விசாரணை

த்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் இஸ்லாமியர்களை புறக்கணிக்க போவதாக எடுக்கும் உறுதிமொழியை பற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், “இன்று முதல் இந்துக்களாகிய நாங்கள் இஸ்லாமியர்களின் கடைகளில் இருந்து எந்தப் பொருளையும் வாங்க மாட்டோம்.
அவர்களுக்கும் நாங்கள் எதையும் விற்க மாட்டோம். இஸ்லாமியர்களின் கடைகளில் நாங்கள் தொழிலாளர்களாக வேலை செய்ய மாட்டோம். எங்கள் நிலங்களை இஸ்லாமியர்களுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ மாட்டோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று அந்த அந்த கிராம மக்கள் பேசியுள்ளனர்.
ஜனவரி 1 அன்று சத்தீஸ்கரில் உள்ள ஆரா மற்றும் குந்திக்காலா ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த இந்து இஸ்லாமிய நபர்களிடையே ஏற்பட்ட சண்டையின் விளைவாக இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இதனைக் காரணமாகக் கொண்டு குந்திகாலா மக்களிடம், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஒரு கூட்டமொன்றை நடத்தவும், இத்தகைய உறுதிமொழியை எடுக்கவும் சிலர் தூண்டியுள்ளதாகத்  தெரிகிறது. இந்த கூட்டத்தில் உறுதிமொழி எடுத்தவர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம்” என்று துணை காவல் ஆய்வாளர் விவேக் சுக்லா கூறியுள்ளார்.
Source : The Wire
‘இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்’ – கிராமவாசிகளின் உறுதிமொழி குறித்து சத்தீஸ்கர் காவல்துறை விசாரணை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்