கோயில் நிகழ்ச்சிகளில் இந்து மத நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு ஆலம்பாடி ஸ்ரீகிருஷ்ண வித்யாலய பள்ளியில் கம்பியூட்டர் ஆய்வகம் திறப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரம் நடுதல் ஆகிய நிகழ்வுகளை துவங்கி வைக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி வருகை தந்துள்ளார்.
பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்து ஆலயங்கள், இந்து கடவுளை வணங்காதவர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து தி.மு.க அரசு அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நிகழ்சிகளை துவங்கி வைப்பது உட்பட பல செயல்களை செயல்படுத்தி வருகிறது. இது வருந்தத் தகுந்த செயலாக உள்ளது. இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள பாஜக கேட்டுக் கொள்கிறது.
இந்து ஆலய நிகழ்ச்சிகளில் இந்து நம்பிக்கை, இறைநம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் வந்துதான் கோயில் நிகழ்சிகளைத் துவங்க வேண்டும் என்றால் இந்து அமைச்சர்களை அனுப்பினால் பாஜக வரவேற்கும். அதற்கு அறநிலைய துறை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிக இந்து அமைச்சர்கள் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
Source: news18
மத மோதல்களை உருவாக்கும் ‘நுபுர் ஷர்மா’க்கள் | Nupur Sharma Comment On Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.