Aran Sei

டெல்லி கலவர வழக்கில் நீதி கிடைப்பதில் தாமதம் – பிருந்தா காரத் குற்றச்சாட்டு

ரசியல் நலனிற்காகவும், கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்த பாஜக தலைவர்களைக் காப்பாற்றவும், டெல்லி கலவரத்தின் உண்மையை மறைப்பதோடு, வேண்டுமென்றே நீதி தாழ்த்தப்படுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி கலவரத்தின் முதலாமாண்டு நினைவாக ‘பிரஸ் கிளப் ஆஃப்  இந்தியா’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய பிருந்தா காரத், இவ்வாறு தெரிவித்திருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஊடகங்கள் ‘இந்து ராஷ்ட்ரிய சித்தாந்தத்தின்’ பிரச்சார ஆயுதமாக செயல்படுகிறது – என்.ராம் கருத்து

நிகழ்ச்சியில் பேசிய பிருந்தா காரத், கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா, தேவைப்பட்டால் மீண்டும் அதே போன்று பேசுவேன் எனக் கூறும் அளவிற்கு தைரியம் வருவதற்கு காரணம், இந்த அரசாங்கம் அளிக்கும் பாதுகாப்பு தான் எனத் தெரிவித்ததாக, தி இந்து குறிப்பிட்டுள்ளது.

எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம்

”2020 பிப்ரவரி 23, ஆம் தேதி, 1,393 காவல்துறையினர் மற்றும் மத்திய படையினர் நியமிக்கப்பட்டிருனர் மற்றும் காவல்துறைக்கு வந்த பெரும்பாலான அழைப்புகள் பதிலளிக்கப்படவில்லை. பிப்ரவரி 24 ஆம் தேதி மத்திய அரசு 6 காவலர்களைக் கூடுதலாக நியமித்து மொத்தம் 1,399 காவலர்களைப் பணியமர்த்தியது என டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று பிருந்தா காரத் சுட்டிக்காட்டி பேசியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சுயாதீன விசாரணையை விரும்புகிறோம். கலவரத்தில் காவல்துறையின் பங்கு என்ன என்பதும், உள்துறை அமைச்சரின் பார்வையில் இருக்கும் நாட்டின் தலைநகரை, ஐந்து நாட்களுக்குத் தீக்கிரையாக்க எப்படி அனுமதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” எனப் பிருந்தா காரத் கோரியதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கலவரத்தின் போதும், அதற்கு நீதியை நாடிய போதும், காவல்துறை அழைப்புகளை ஏற்கவில்லை என்றும், காவல்துறை மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கில் நீதி கிடைப்பதில் தாமதம் – பிருந்தா காரத் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்