Aran Sei

நம் நாடு பிளவுபடுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும் – தொழிலதிபர் நாதிர் கோத்ரேஜ்

ம் நாடு பிளவுபடுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இன்னமும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் நாதிர் கோத்ரேஜ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தொழிலதிபர்கள் வெளிப்படையாக சமூக மற்றும் அரசியல் விஷயங்களை பேசுவதை தவிர்ப்பார்கள். ஆனால் 2019 ஆண்டு மறைந்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் அவர்கள் பாஜக ஆட்சியை பற்றி வெளிப்படையாக பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை பயத்தையும் வெறுப்பையும் பரப்பி நாட்டை பலவீனமாக்கி வருகின்றன – ராகுல்காந்தி விமர்சனம்

“தொழிலதிபர்கள் பாஜகவை கண்டு அஞ்சுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது அவர்களை விமர்சிக்க முடிந்தது. ஆனால் இப்போது உங்களை பொது வெளியில் விமர்சித்தால் நீங்கள் அதை விரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை” என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருந்த கூட்டத்திலேயே பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ்.விமர்சித்தது பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியது.

பொருளாதாரம், நிதி, கல்வி போன்ற விஷயங்களில் முன்னேறி வரும் நாட்டை பிளவுபடுத்தாமல் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நம் நாட்டை பிளவுபடுத்துவதை நாம் நிறுத்த வேண்டும் என்று கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் நாதிர் கோத்ரேஜ் தெரிவித்துள்ளார்.

சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக வெறுப்பு பேச்சை ஏற்க கூடாது- உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

நாதிர் கோத்ரேஜ் அவர்களின் அண்ணன் ஆதி கோத்ரேஜ் அவர்கள், நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் வெறுப்பு குற்றங்கள் நமது வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று 2019 ஆண்டு தெரிவித்திருந்தார்.

லாபங்கள் மட்டுமே வணிக நிறுவனங்களின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. நல்ல விஷயங்களை செய்வதன் மூலமாகத்தான் ஒருவர் தனக்குத்தானே சிறப்பான விஷயங்களை செய்து கொள்ள முடியும். சமூக உரிமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் நாம் ஆசைப்பட வேண்டும். ஆனால் சமத்துவமின்மை பிரச்சினை முன்பை விட கடினமாக வருவதாக நாதிர் கோத்ரேஜ் கவலை தெரிவித்துள்ளார்.

Source : the wire

கேஸ் சிலிண்டரில் மோடி படம் | பாஜகவை அலற விடும் சந்திரசேகர் ராவ் | Aransei Roast | BJP | MODI | KSR

நம் நாடு பிளவுபடுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும் – தொழிலதிபர் நாதிர் கோத்ரேஜ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்