Aran Sei

‘டெல்லியைக் கட்டுபடுத்தும் முழு அதிகாரம் தேவை’ – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

credits : the hindu

டெல்லியைக் கட்டுபடுத்துப்வதற்கான முழு  அதிகாரம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை எதிர்த்து ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

டெல்லியில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் மீதான கட்டுப்பாட்டை  ஒன்றிய அரசு கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இந்தி தேசிய மொழியல்ல – சுதீப்புக்கும் அஜய் தேவ்கானுக்கும் ட்விட்டரில் வாக்குவாதம்

“புதுச்சேரி அல்லது லட்சத்தீவுகளை நிர்வகிப்பது வேறு விஷயம் ஆனால் தேசிய தலைநகரை நிர்வகிப்பது வேறு. டெல்லி தேசிய தலைநகர் என்பதால், அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருப்பது அவசியம். டெல்லி என்பது தேசத்தின் முகம். உலகமே இந்தியாவை டெல்லி வழியாக பார்க்கிறது. டெல்லியின் சட்டங்களின் முக்கிய அம்சம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசுக்கு டெல்லியின் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்கள் இருப்பதும், முக்கியமான பிரச்சினைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் அவசியம். ஒன்றிய அரசுக்கும் டெல்லிக்கும் இடையே ஏதேனும் நேரடி மோதல்களைத் தடுக்கும் வகையில் டெல்லியை நிர்வகிப்பதற்கான சட்டங்கள் உள்ளன.

‘இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் தலையிட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம்’ – எலான் மஸ்க்கை எச்சரித்த சசி தரூர்

டெல்லியின் மீது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டை வைத்திருப்பது “தேசிய நலனில் முக்கியமானது”. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டும்” என்று ஒன்றிய அரசின் தரப்பில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.

டெல்லி அரசு சார்பில் கூறப்பட்டதாவது, “டெல்லி சட்டமன்றத்தை அர்த்தமற்றதாக ஒன்றிய அரசு ஆக்கிவிட்டது. டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளை, ஒன்றிய அரசு தன்னுடைய துணைநிலை ஆளுநர் மூலம் தடுத்து செயல்பட விடாமல் செய்கிறது” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Source: newindianexpress

தமிழக அரசு மாரிதாசை  கூப்பிட்டு விசாரிக்கணும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்

‘டெல்லியைக் கட்டுபடுத்தும் முழு அதிகாரம் தேவை’ – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்