Aran Sei

வர்ண மற்றும் சாதிய அமைப்பை நாம் தூக்கி எறிய வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Image Credits: India TV

ர்ண மற்றும் சாதிய அமைப்பை நாம் முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றுடன் தற்போதுள்ள சாதி அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் ரேணுகா போகரே எழுதிய வஜ்ரசூசி துங்க் என்ற புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோகன் பகவத், “சமத்துவ சமூகம் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. தற்போது அது மறக்கப்பட்டு பல மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது.

“காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் நாம் இன்று போராடுகிறோம்” – கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு

முன்பு வர்ணம் மற்றும் சாதி அமைப்புகளில் பாகுபாடு இருக்கவில்லை. அதன் பயன்பாடு மட்டுமே இருந்தது. இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை. அவைகள் மறக்கப்படவேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும்

உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது. இப்படி தவறுகளை ஏற்றுக் கொள்வதால் நமது முன்னோர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று நீங்கள் கருதுகிறீர்களா, நிச்சயமாக இல்லை. ஏனென்றால் உலகின் எல்லா பகுதிகளில் உள்ள முன்னோர்களும் தவறு செய்தவர்களாகவே இருக்கிறார்கள்” என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Source : the hindu

RSS Chief Mohan Bhagawat Speech about Hindu Muslim population | Haseef | SY Qureshi | Nagpur | Rss

வர்ண மற்றும் சாதிய அமைப்பை நாம் தூக்கி எறிய வேண்டும் –  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்