நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியுள்ளார். இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது” என்று மதுரை ஆதினம் பேசியிருந்தது சர்ச்சைக்குள்ளானது.
மதுரையில் ஜூன் 5 மற்று நடைபெற்ற துறவியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மதுரை ஆதீனம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘பட்டின பிரவேசத்தை உலகறிய செய்த கி.வீரமணிக்கு நன்றி’ – மதுரை ஆதீனம்
ஆதீனத்தின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், “எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?” “வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை. தளபதிமேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை” என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மதுரை ஆதினத்தை யாருக்கோ யாரோ விடும் வில்லின் அம்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் முந்தைய வரலாற்றை மறந்து அவரது கடையாணியை அவரே கழற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தீட்டு படுமென்று அரசு ஊழியருக்கு தண்ணீர், கழிவறை மறுப்பு – 6 பேர் மீது வழக்கு பதிந்த காவல்துறை
உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திராவிட இயக்கம் இல்லையென்றால் ஆதினங்களே இருக்க முடியாது என்ற வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்திருக்கும் மதுரை ஆதினத்திற்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
சூத்திரர்கள் சன்னியாசியாவதற்கு உரிமை இல்லை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அதையெல்லாம் பற்றி கவலைப் படாமல் ஆதினங்களை அங்கீகரித்திருப்பதே இந்த அரசு தான். அதைப்பற்றியெல்லாம் புரிந்து கொள்ளாமல் யாருக்கோ யாரோ விடும் வில்லின் இவர்கள் அம்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் மதுரை ஆதினம் தன்னுடைய உணர்வுகளுக்குத் திரும்ப வேண்டும், திரும்புவார்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Source : Puthiyathalaimurai
படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஆபாச அண்டா Bayilvan Ranganathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.