Aran Sei

நாங்கள் இந்துத்துவவாதிகள்தான் பாஜகவின் அடிமைகள் அல்ல – சிவசேனா 

credits : the indian express

நாங்கள் இந்துத்துவவாதிகள்தான் ஆனால் பாஜகவின் அடிமைகள் அல்ல என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்திருந்தார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள மும்பையில் மராத்தியர்களின் ஒற்றுமையை உடைக்கும் சூழ்ச்சி என்று சிவசேனாவின்  அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா கூறியுள்ளது.

“நீங்கள் ஏன் பாலாசாகேப் பெயரில் ஓட்டு கேட்கிறீர்கள்? உங்கள் மோடி சகாப்தம், மோடி அலை குறைய ஆரம்பித்துவிட்டதா?” என்று சாம்னாவின் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தெலங்கானா: நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ கைது

கடந்த ஜூன் மாதம், சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 39 சட்டமன்ற உறுப்பினர்கள் சிவ சேனாவின் கட்சித் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர், இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசாங்கம் வீழ்ந்தது.

இதன் காரணமான ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணைத் முதலமைச்சராக பதவியேற்றார்.

தற்போது, சிவசேனா கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக ஃபட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.

சாவர்க்கரின் சுவரொட்டிகளை தொட்டால் கைகளை வெட்டுவோம் – இந்து சேனா தலைவர் எச்சரிக்கை

இது குறித்து கருத்து தெரிவித்த சாம்னா பத்திரிகை, “ஃபட்னாவிஸின் வார்த்தைகள் நரியின் வஞ்சக அழைப்பைப் போன்றது, மும்பை மற்றும் தானே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

எல்.கே. அத்வானி, அடல் பிகார் வாஜ்பாய் ஆகியோரை மறந்தவர்கள்  பாலாசாகேப்பின் கனவுகளை நிறைவேற்றுவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்றைய பாரதிய ஜனதா கட்சி உண்மையான பாஜக அல்ல; வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு சொந்தமான கட்சி உண்மையில் இருக்கிறதா என்றும் தெரிவித்துள்ளது.

பீகார்: பணி நியமனம் தாமதமானதால் போராட்டம் – போராட்டக்காரர்களைத் தாக்கிய கூடுதல் ஆட்சியர் – விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு

வாஜ்பாயின் வாக்குறுதியைக் காப்பாற்றுவதாக பாஜக இருந்தது, ஆனால் அது இப்போது இல்லை, அதனால்தான் நாங்கள் அத்தகைய பாஜகவை (கூட்டணி) விட்டுவிட்டு இந்துத்துவா என்கிற பாதையில் செல்கிறோம்.  எங்கள் அரசியல் நிலைப்பாடு இன்னும் அப்படியே உள்ளது. நாங்கள் இந்துத்துவவாதிகள், ஆனால் நாங்கள் பாஜகவின் அடிமைகள் அல்ல. நாங்கள் மகாராஷ்டிராவின் நேர்மையான ஊழியர்கள், டெல்லியின் வேலைக்காரர்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

சிவசேனாவில் பிளவை உருவாக்கும் உங்கள் கனவுதான் பாலாசாகேப் தாக்கரேவின் கனவா என்றும் சாம்னா இதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிடிஆர் விட்ட டோஸ் | கதி கலங்கிய ஒன்றியம் | Maruthaiyan | PTR Palanivel Thiagarajan | DMK | Periyar

நாங்கள் இந்துத்துவவாதிகள்தான் பாஜகவின் அடிமைகள் அல்ல – சிவசேனா 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்