பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக, சூரிய மின்சார ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குப்படுத்துவதற்கு, மோடி அரசைப் பாராட்ட விரும்புகிறேன் என மத்திய பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்திருப்பதாக, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக, மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மோடியை பாராட்ட விரும்புவதாக மத்திய பிரதேச மாநிலத்தின் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங், தெரிவித்திருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களுக்குப் பயனளிக்கும் விதமாக, மாநில அரசின் வரிகளைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த விஸ்வாஸ் சாரங், ”நான் மோடியை பாராட்ட விரும்புகிறேன்… அவர் சர்வதேச கச்சா எண்ணெய விலையைக் கட்டுப்படுத்த, போக்குவரத்திற்காகச் சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்த விரும்புகிறார். மின்சார வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நினைக்கும் மோடியின் முடிவு, சர்வதேச கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும்” என கூறியதாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.
”உற்பத்திக்கும், தேவைக்கும் இடையில் இருக்கும் சமமற்ற நிலையே சர்வதேச சந்தையில் விலை உயர்வுக்குக் காரணம். நாம் தேவையைக் குறைத்தால், விலையைக் கட்டுப்படுத்த முடியும். அதனால் தான் மோடி மின்சார வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்… இதன் மூலம் எண்ணெய் விலையை நாம் கட்டுப்படுத்த முடியும்” என சாரங் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி போராடும் விவசாயிகளை தாக்கிய ‘உள்ளூர்’ நபர்கள் – உண்மை முகங்களை காட்டும் ஊடக புலனாய்வு
புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பாக, கடந்த வாரம் பேசிய பிரதமர் மோடி, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயை அறிவித்தார்.
இந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் தான், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி அதிகமாக விதிக்கப்பட்டிருப்பதாகவும், பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூபாய் 4.5 மற்றும் டீசல் மீது 3 ரூபாய் விதிக்கப்பட்டிருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.