மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.வி.குழுமத்தின் வைகுண்டராஜனுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான எஸ்.வைகுண்டராஜன் மீது கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு, அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததாக, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.
அந்த வழக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநராக இருந்த நீரஜ் கத்ரிக்கு, வைகுண்டராஜன் 4.13 லட்சத்தை மறைமுகமாக (கத்ரியின் மகன் சித்தார்த்துக்கு, விஐடி பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்துள்ளார்) லஞ்சமாக கொடுத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு – ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
இதற்கு கைமாறாக, சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட, திருநெல்வேலியின் திருவம்பலபுரம் பகுதியில் (166.65 ஹெக்டெரில் உள்ள கனிமவளம் நிறைந்த பகுதி) செயல்பட்டு வந்த வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு, பல்வேறு ஒப்புதல்களை அளிக்க கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் செயலளாருக்கு நீரஜ் கத்ரி கடிதம் அனுப்பியதாக, சிபிஐ கூறியுள்ளது.
மகளிர் ஆணைய நியமனம் : 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி
நீரஜ் கத்ரி மற்றும் அவரது மகன், டெல்லியில் இருந்து சென்னை செல்வதற்கும், பின்பு சென்னையிலிருந்து டெல்லிக்கு திரும்புவதற்குமான பயணச்சீட்டுகளை, சுப்புலஷ்மி என்பவர் வாங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், திருநெல்வேலியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் செயல்படுவதற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
`லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பிச்சைக்காரர்கள்’ – உயர்நீதி மன்ற மதுரைக் கிளை
தமிழகத்திற்கு வெளியே அமைந்துள்ள அரசு நிறுவனங்களிடமிருந்து, சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவது போன்ற வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் பணிகளை கவனிப்பதற்காக சுப்புலட்சுமி, 2011 முதல் 2013 ஆரம்பம் வரை ஒப்பந்த அடிப்படையில் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டிருக்கிறார் என, சிபிஐ தெரிவித்துள்ளது.
`ஆசியாவிலேயே அதிகம் லஞ்சம் கொடுக்கப்படும் நாடு இந்தியாதான்’ – ஆய்வு முடிவு
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் எஸ்.வைகுண்டராஜனுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரான சுப்புலஷ்மிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் அபராதமும் விதித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணை இயக்குநர் நீரஜ் கத்ரிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு பத்த லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.