LGBTQ+ சமூகத்தை சேர்ந்த மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்லகராதியை வெளியிட்டுள்ளது. ஊடகம், பொதுவெளி என அனைத்து தளங்களிலும் இந்த அகராதியை பின்பற்றுவது கட்டாயம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
LGBTQIA+ சமூகத்தினரை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அளித்த பரிந்துரையின்படி இந்த சொல்லகராதி உருவாக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தன்பால் ஈர்ப்புடைய இரு பெண்களை காவல் நிலையத்தில் தரக்குறைவாக நடத்திய வழக்கை விசாரித்த அவர் இந்த பரிந்துரையை அரசிற்கு வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்த சொல்லகராதியை அரசு வெளியிட்டுள்ளது.
அதில் பால், பாலினம், பாலியல்சார்பு, சமூகம்சார்ந்த பிற சொற்கள் ஆகியவற்றை தமிழில் எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது குறித்த பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆங்கிலத்தில் புழக்கத்தில் உள்ள சொற்களுக்கு அரசியல் சரித்தன்மைமிக்க மற்றும் மரியாதைக்குரிய தமிழ் சொற்களை வெளியிட்டுள்ளது.
நாங்கள் இந்துத்துவவாதிகள்தான் பாஜகவின் அடிமைகள் அல்ல – சிவசேனா
மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர், திருநங்கை, திருநம்பி என இடத்துக்கு ஏற்ப அழைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தன் பாலீர்ப்பு ஆண் (gay), தன் பாலீர்ப்பு பெண் (lesbian), இரு பாலீர்ப்புடைய நபர் (bisexual), பால்புதுமையர் (queer), அல்பாலீர்ப்பு (asexual) என்றே அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி இந்த சமூகத்தினரை மனநோய் உள்ளவர்களாக கருதி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தடை செய்யப்பட்ட கன்வெர்ஷன் தெரப்பியை, ‘மாற்றுதல் என்ற பெயரிலான போலி மருத்துவம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சொல்லகராதியை இந்தியாவிலேயே முதல் முறையாக வெளியிட்டுள்ள மாநிலம், தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
Kallakurichi Sakthi School students statement recorded in court – Sundharavalli | Ravikumar Sakthi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.