பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாத இறுதியில் விடுதலையாக உள்ளார். அவர் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: எடப்பாடி பழனிசாமி
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் சசிகலா வெளியே வந்தாலும், அதிமுகவுடன் இணைய 100 விழுக்காடு வாய்ப்பு இல்லை என்றும் கூறியிருந்தார்.
சசிகலா வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்
இந்நிலையில், இன்னும் ஒருவாரத்தில் சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அவர் சிகிச்சைக்காக பெங்களூர் சிவாஜி நகரிலுள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
விடுதலையாகிறார் சசிகலா: அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கிய சிறை நிர்வாகம்
இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன், “சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறினார்கள். ஆக்சிஜன்அளவு குறைந்ததாகவும் எனக்கு தகவல் தெரிவித்தார்கள். சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது” என்று கூறியுள்ளார்.
சசிகலா விரைவில் விடுதலையா? – உண்மைத் தகவலைக் கூறிய உள்துறை செயலாளர் ரூபா
கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சசிகலாவுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.