Aran Sei

விவசாயிகள் மீது இந்திய அரசின் அடக்குமுறை: ஐ.நா சபைக்கு எடுத்துச் செல்ல அமெரிக்க அதிபரை வலியுறுத்தும் இந்திய வம்சாவளியினர்

விவசாயிகள் போராட்டம், மோடி அரசின் அடக்குமுறை தந்திரம்குறித்து அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்.

40 க்கும் மேற்பட்ட தெற்காசிய வம்சாவளி வழக்கறிஞர்கள், விவசாயிகள் போராட்டம் மற்றும் மத்திய அரசு எடுத்துவரும் அடக்குமுறை நடவடிக்கைகள்குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடனுக்கு  வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதம் அமெரிக்க அரசு செயலாளர் அந்தோனி பிளின்கன், மக்களவை சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்க மாநிலங்கள் அவை பெரும்பான்மை கட்சித் தலைவர் சுக் ஸ்க்யூமர், வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சலிவன், அவையின் வெளிநாட்டு விவகார கமிட்டியின் தலைவர் கிரிகோரி வெல்டன் மீக்ஸ், செனட் வெளியுறவுத் துறை கமிட்டியின் தலைவர் ஜிம் ரிஸ்ச், டாம் லான்டோஸ் மனித உரிமைகள் ஆணையத் தலைவர்களான ஜேம்ஸ் பி. மெக்கவர்ன் மற்றும் கிறிஸ்டோபர் எச். ஸ்மித், மற்றும் அமெரிக்க பன்னாட்டு மத சுதந்திர ஆணையத்தின் தலைவர் கெயில் மான்சின் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் “இயல்பு நிலை” – காதில் பூ சுற்றிக் கொண்டு புறப்பட்ட வெளிநாட்டு தூதர்கள்

 எதிர்ப்பின் அளவையும், அவர்கள் எந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்களோ அந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும் கூறும் அந்த அறிக்கை, நரேந்திர மோடி அரசு, அந்த அமைதிவழி போராட்டத்தைக் கைதுகள், தணிக்கைகள் உள்ளிட்ட வன்முறையான மற்றும் சட்டவிரோத வழிகளில் எவ்வாறு அடக்கி வருகிறது என்பதை உயர்த்திக் காட்டி உள்ளது.

அந்தக் கடிதம், சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட தொழிலாளர் உரிமை செயற்பாட்டாளர் நோதீப் கவுர், ஜனவரி 26 அன்று நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட நவ்ரீத் சிங், மற்றும் தில்லி போராட்டக்காரர்களுக்குச்  சிகிச்சை அளித்தபோது தாக்கப்பட்ட மருத்துவர் ஸ்வாய்மான் சிங் ஆகியோர் பற்றியும் எடுத்துக்காட்டி உள்ளது.

அரசு, மொத்தமாக கைது செய்வது மட்டுமின்றி, இணையத்தை முடக்கியதன் மூலம் தகவல் தொடர்பையும் துண்டித்துள்ளது.  சமூக வலைத்தளங்களின் எல்லையைச் சுருக்கி உள்ளதுடன் ஊடகவியலாளர்கள்மீது வழக்குகளைப் தொடுத்துள்ளது என்று கூறும் அந்தக் கடிதம்,

டெல்லி போராடும் விவசாயிகளை தாக்கிய ‘உள்ளூர்’ நபர்கள் – உண்மை முகங்களை காட்டும் ஊடக புலனாய்வு

விமர்சகர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்த துன்புறுத்தலுக்கு விரிவான சான்றுகளைச் சுட்டிக்காட்டி, இந்தப் பிரச்சினைகளை ஜோ பைடன் தன் தகுதிக்கு ஏற்ற வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் எழுப்பிக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

கையொப்பங்களுடன் கூடிய அந்தக் கடிதம் கீழே தரப்பட்ட்டுள்ளது:

மாண்புமிகு குடியரசுத் தலைவர் ஜோசப் ஆர். பைடன் ஜூனியர்,

வெள்ளை மாளிகை

1600, பென்சில்வேனியா அவே,

வாஷிங்டன் DC 20502,

அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

அன்புடைய குடியரசுத் தலைவர் பைடன் அவர்களுக்கு,

 கீழே கையொப்பமிட்டுள்ளவர்கள், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் குடிமை மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் ஆகும். இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் சட்டமீறல்களும், வன்முறைகளும் நடப்பது குறித்த ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தவும், இந்தியாவை அழைத்துப் போராட்டக்காரர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மதிக்க வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளவும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.

வடக்கு டெல்லி வெறுப்பு கலவரம் – தம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் மீட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்

தங்கள் சொந்த வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும், விவசாய கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைச் சமரசம் செய்யும், அவர்களது சட்டப் நிவாரணத்தைக் குறைக்கும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பைப் பாதிப்படையச் செய்யும் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த 2020 நவம்பரிலிருந்தே போராடி வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சட்டங்கள் ஒரு சில கார்பரேட்டுகளின் நலனுக்காக, நோய்த் தொற்று நெருக்கடி நேரத்தில், இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் உள்ளிட்ட எவருடனும் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்களும் நடத்தப்படாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீங்கள் கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம் – சாமானியர் நீதிமன்றம் சென்றால் வருத்தம் தான் அடைவர் – முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்

இந்த நேர்மையற்ற, ஜனநாயக விரோத நடைமுறை நாடு தழுவிய அணிதிரட்டலுக்கு வழிவகுத்து அண்மைக்கால இந்திய வரலாற்றிலேயே இல்லாத மிகப் பெரிய போராட்டத்தை இப்போது முன்னெடுக்க வைத்துள்ளது. கோடிக்கணக்கானவர்கள் நிலம், நம்பிக்கை, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றாக இணைந்துள்ளனர். இந்த இயக்கம் பரந்துபட்ட விவசாயிகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் குடிமை சமூகங்களின் கூட்டணியால் வழி நடத்தப்படுவதுடன். ஒவ்வொரு நாளும் உள்ளுணர்வு மற்றும், உத்வேகத்துடனும் வளர்ந்து வருகிறது.

 இந்த அமைதிவழி கூட்டத்திற்கு மோடி அரசும், பாதுகாப்பு படைகளும் வன்முறை, சட்டவிரோத கைதுகள் மற்றும் தணிக்கை முறையால் பதில் கூறி வருகின்றன.

‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது

ஐயத்திற்கிடமின்றி இந்தச் செயல்களைக் கண்டிக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணைந்த ஒன்றுபட்ட செய்திகளை வழங்கவும் உங்கள் நிர்வாகத்தையும், அதே போல தேர்ந்தெடுக்கப்பவர்களையும், ஊடக அமைப்புக்களையும், வணிகங்கள் மற்றும் குடிமை மற்றும் மதத் தலைவர்களையும் அறைகூவி அழைக்கிறோம்.

 அரசு வன்முறை அதிகரிப்பு மற்றும் மொத்த மனித உரிமை மீறல்கள்

 அண்மை நாட்களில், போராட்டக்காரர்களைப் பாதுகாப்புப் படையினர் சாதாரண ஆட்கள்போல் உடையணிந்து தாக்கியுள்ளனர். மேலும்  வன்முறையை அனுபவிப்பவர்களை  பாதுகாக்கத் தவறி விட்டனர்.

ஜனவரி 12 ம் நாள்  தொழிலாளர் உரிமைச் செயற்பாட்டாளரான தலித் இனத்தைச் சேர்ந்த நோதீப் கவுரை அரியானா காவல்துறை, சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டிப் பணம் பறித்தல், மற்றும் கொலை முயற்சி ஆகிய தவறான குற்றச்சாட்டுகளைச் சாட்டிக் கைது செய்துள்ளது. அடுத்த நாள் அவரைச் சந்தித்த அவரது சகோதரியிடம்  தன்னை காவல்துறை அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கி, பாலியல் வன்கொடுமைச் செய்ததாக நோதீப் கூறியுள்ளார். நோதீப்பின் குடும்பத்தினர் மருத்துவ அறிக்கையைக் கோருகின்றனர். ஆனால் அதன் நிலை இன்றுவரைத் தெரியவில்லை. காவல்துறை அவரை இன்னும் காவலில் வைத்துள்ளது.

ஜனவரி 26 அன்று அரியானாவைச் சேர்ந்த 25 வயது இளைஞர் நவ்ரீத் சிங் என்ற இளைஞர், காவலர்கள் சுட்டதால், அவர் ஓட்டி வந்த டிராக்டர் கட்டுபாடிழந்து, கவிழ்ந்து சில விநாடிகளில்  உயிரிழந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர். நவ்ரீத்தின் குடும்பத்தினரும், மருத்துவத்துறை வல்லுநர்களும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் தான் மரணம் நேரிட்டுள்ளதாக நம்புகின்றனர்.

ஒரு இமாலய துயரம் கற்பிக்கும் ஆறு பாடங்கள் – ராமச்சந்திர குஹா

அதே நாள் நியூஜெர்சியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகனான மருத்துவர் ஸ்வாய்மான் சிங் தலைமையிலான மருத்துவத் துறை வல்லுநர்கள் குழு போராட்டக்காரர்களுக்கு தில்லியில் மருத்துவம் செய்ததற்காக கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் பிற மூன்று மருத்துவர்களின் கைகளை முறித்து, பல்வேறு காயங்களையும் ஏற்படுத்தி உள்ளனர்.

அதே நாளில் நடந்த மற்றொரு நிகழ்வில், சிங்கு எல்லையில் உள்ள போராட்டக்காரர்கள் முகாமில் அரசு ஆதரவு கும்பல் ஒன்று புகுந்து, போராட்டக்காரர்களைக்  கற்களால் தாக்கி, அவர்களுடைய கூடாரங்களைப் பிய்த்தெறிந்துள்ளனர். விவசாயிகள்மீது வன்முறை திருப்பிவிடப்பட்டதே தவிர எதிர்கிளர்ச்சி செய்தவர்கள் மீதல்ல என்ற வகையில்  காவல்துறை உடனடியாக செயல்பட்டது எனச் சாட்சிகள் கூறுகின்றன. காவல்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவை போராட்டக்களத்தைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உடல்ரீதியாக மோசமான பாதிப்புகளை  ஏற்படுத்தக்கூடிய பெரிய கூரான உலோக ஆணிகளுடன் கூடிய தடுப்பரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு படைகள் தாங்கள் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைக்காது என்ற பாதுகாப்புக் கலாச்சார உணர்வில் துணிவுடன் உள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

1984 ம் ஆண்டின் தில்லி சீக்கியர் படுகொலைகளின்போது தில்லி காவல்துறை துறையின் நடவடிக்கை மற்றும் செயலற்ற தன்மை ஆகியவற்றின் தயவில், அரசு ஆதரவு கும்பல்கள் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றன. மேலும் பல பத்தாண்டுகளுக்கு பாதுகாப்புப் படைகள் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் அட்டூழியங்கள் செய்தன. தற்போது தில்லியில் கூடியுள்ள விவசாயிகளில் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வன்முறையால் பாதிக்கப்படும் அதிக அபாயத்தில் உள்ளார்கள். இந்திய அரசு அனைத்து வகையிலும் தனது வலிமையை அதிகப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்

ஒட்டு மொத்த கைது, கூட்டுத் தண்டனை, துன்புறுத்தல்கள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி  பிப்ரவரி 4ம் நாளில் மட்டும் கைது செய்யப்பட்ட 200 பேருடன் பல நூற்றுக்கணக்கானவர்களைப் பாதுகாப்பு படைகள் கைது செய்துள்ளன என வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள், ஊடகச் செய்திகள் ஆகியவை தெரிவிக்கின்றன.  அவர்களில் சிலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை, விவசாயப் சங்கத் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இலவச உணவு போன்ற உதவிகளைச் செய்து வருபவர்கள் உள்ளிட்ட பன்னிரண்டிற்கும்  மேற்பட்டவர்களுக்கு விசாரணைக்கு வர ஆணைகளை அனுப்பி உள்ளது.

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

 உத்தர்கண்ட் மாநில அரசு “தேச விரோத” சமூகவலைதள பதிவுகள் இடுபவர்களுக்கு கடவுச்சீட்டு மறுக்கப்படும் என்றும், பீகாரில் காவல்துறை, போராட்டங்களில் பங்கெடுப்பவர்களுக்கும், ஆதரவு தருபவர்களுக்கும் அரசுப் பணியில் சேர தடை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளன. இந்த இரு மாநிலங்களின் தலைமையும் மோடிக்கு அடிபணிந்தவர்கள். இந்திய அரசு நீண்ட காலமாகவே தனது அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த “தீவிரவாத எதிர்ப்பு”, “நாட்டுப் பாதுகாப்பு” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி வருவதால் இது இப்போது மாறுபட்டதல்ல. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடுக்கும் இந்திய குற்றவியல் பிரிவுச் சட்டத்தின் 144 வது பிரிவு, தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் எந்த ஒரு தனிநபரையும்  முன்கூட்டியே கைது செய்து ஓராண்டு சிறையில் வைக்க அனுமதிக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். பலரும் நீண்ட கால, காலவரையறையற்ற சிறைக்காவலில் இருப்பது நன்கு கண்டறியப்பட்ட கவலையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, தில்லியில் சிஏஏ வுக்கு எதிராகப் போராடிய 21 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டிற்கும் மேலாக, பல முறை பிணையும் மறுக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக சாட்சிகளை  உருவாக்க முயலலாம்.

கடந்த ஆண்டு, தில்லியில் இஸ்லாமிய விரோத படுகொலைபற்றிப் பொய் கூறவும், மனித உரிமைக் காவலர்களைத் தவறாகப் சித்தரிக்கவும் கைதிகளைக் கட்டாயப்படுத்தினர்.(வசிஷ்ட், பிடிஐ, 2/6/2020)

இணைய முடக்கம், ஊடகவியலாளர்களை குறி வைப்பது, தணிக்கை

கடந்த சில வாரங்களாக தில்லியில்  இந்திய தணிக்கைத் துறையால் பலமுறை கைப்பேசி இணைப்புகளும், இணைய சேவையும்  துண்டிக்கப்பட்டது. செயலிழப்புகள் பல பகுதிகளில் தொடர்கின்றன. பிற இடங்களில் மீண்டும் அமல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. பரந்த அளவில் இணைய முடக்கம் செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நவ்ரீத்சிங் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட காவல்துறை வன்முறையை ஆவணப்படுத்திய பல ஊடகவியலாளர்கள்மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கேரவன் இதழின் நிர்வாக ஆசிரியர் வினோத் கே. போஸ், தி வயரின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகிய இருவரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல இந்தியாவின் முதல் தேசிய நாளிதழின் பெண் ஆசிரியரான, 75 வயதான மிருனாள் பாண்டே, மூத்த தொலைகாட்சி நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக,  சிங்கு எல்லையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு கும்பல் ஜனவரி 30 அன்று வன்முறையில் ஈடுபட்ட காணொளி காட்சியை முகநூலில் பதிவிட்ட மன்தீப் பூனியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப் பல நாட்களாக காவலில் வைத்துள்ளதுடன், ஆடைகளை அவிழ்த்துக் கடுமையாகத் தாக்கியதுடன் செய்திகள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு கட்டளை இடப்பட்டுள்ளார். இந்திய அரசு விவசாயிகள் போராட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டருக்கு உத்தரவிட்டுள்ளது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என அந்நிறுவனத்திற்கு மிரட்டலும் விடப்பட்டுள்ளது. கேரவன் உள்ளிட்ட பலரது  ட்விட்டர் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, உள்ளடக்கம் பேச்சுரிமைக்குட்பட்டதாக இருந்தாலே அனுமதிக்கப்படும் என ட்விட்டர் கொடுத்த அறிவிப்புக்குப் பின்னர் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

எந்த விதமான விமர்சனமும் தன்னிச்சையான கைதிற்குமோ அல்லது அதைவிட மோசமான நிலைக்குமோ உள்ளாகும் என்ற பொதுவான அச்சம் இந்தியாவில் தற்போது உருவாகி உள்ளது. இந்து தேசியவாதிகள் சிலர் இளம் இஸ்லாமியர் நகைச்சுவையாளர் முனாவர் ஃபரூக்கியின் குறிப்புகள் “மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடும்” என்று  புகாரளித்தற்காகவே அவர் தனது நகைச்சுவையை வெளிப்படுத்துவதற்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளார். எட்வின் ஆன்டனி, ப்ராகார் வியாஸ், நளின் யாதவ், சதாகத் கான் ஆகிய ஐவரும் அவருடன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

விரோதம் மற்றும் தவறான எண்ணங்களின் ஒரு வடிவமைப்பு

இந்தியா முழுவதும்  சிறுபான்மை சமூகத்தினர் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் உங்கள் நிர்வாகம் பதவிக்கு வருகிறது. அண்மையில் கையெழுத்திடப்பட்ட சிஏஏ (மத) நம்பிக்கையின் அடிப்படையில் குடியேறிய இஸ்லாமியருக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டுகிறது.  சிஏஏ வின் சகோதரியான தேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாய இடப்பெயர்விற்கும், அதன்மூலம் பல கோடிக்கணக்கான எளியவர்கள் நாடற்றவர்களாக்கி  விடும் கொள்கை ஆகும். இந்திய அரசாங்கம், ஜம்மு காஷ்மீரில் அதற்கு  இந்திய அரசியலமைப்பு சட்டம்மூலம் தரப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரத்தைப் பிடுங்கியதன் மூலம்  பெருமளவு மக்களைப் புறக்கணிக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. சமீபத்திய விவசாய சட்டங்கள் விவசாயிகளையும்  அவர்களை ஆதரிப்பவர்களையும்  அமைப்பு ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அவர்களது அவலநிலையை ஆவணப்படுத்துவது இதன் விரிவான நிகழ்ச்சி நிரலாகும். இந்தச் சட்டங்களால் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படும் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள், தீவிரவாதிகள் என்றும் மதத் தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டங்களும், கொள்கைகளும், நடைமுறைகளும் தண்டனையிலிருந்து காப்புறுதி அளிக்கும் நீண்ட வரலாறு, தோற்றுவிட்ட ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மேலாதிக்கச் சித்தாந்தமான இந்துத்துவா ஆகியவற்றில் வேரூன்றி உள்ளன. பாஜக வும் பிரதமர் மோடியும் சிறுபான்மையினரரை குறிப்பாக இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் இரண்டாம் தரக் குடிமக்களாக்கி, இந்துக்கள் முன்னுரிமை நிலையை அனுபவிப்பவர்களாக இருக்கும் இந்து அரசை உருவாக்க விரும்புகிறார்கள்.

இந்துத்துவாவின் நீண்ட கரங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டுள்ளன. அவர்கள் பாடநூல்களில் இந்துமதம் பற்றிய விளக்கங்களை மாற்றி எழுதுகின்றனர். பல்கலைகழகங்களுக்கும், அறநிலையங்களுக்கும் நிதி அளித்து வெளிநாட்டுத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்துவதுடன், விவசாயிகளை ஆதரிப்பவர்கள் மீது செல்வாக்கு செலுத்துதல் மற்றும் இழிவுபடுத்துதல் ஆகியவற்றைச் செய்கின்றனர்.

இந்தியாவின் புதிய ஆளும் மேட்டுக்குடி – இன்னும் எதிர்ப்பை எதிர்கொள்ளும்

நீங்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்

இந்தியாவின் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மட்டுமல்ல, வாழ்வுரிமை, சுதந்திரம், தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவல் ஆகியவற்றிலிருந்து விடுதலை, அமைதியாக கூடுவதற்கும் அமைப்பாவதற்கும், கருத்துக்களை வைத்துக் கொள்ளவும் மற்றும் வெளிப்படுத்தவும் உள்ள உரிமைகள் உள்ளிட்ட பன்னாட்டு அடிப்படை மனித உரிமை விதிமுறைகளையும் மீறுவதாகும்.

  எனவே, ஒட்டு மொத்தமாக மனித உரிமைகளை மீறுதலுக்கான மிகப் பெரிய ஆபத்து இப்போது உள்ளது. நாங்கள் உங்களை மரியாதையுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்:

  •     போராட்டக்காரர்களுக்கு எதிராக வலிமையைப் பயன்படுத்துவதைக் கண்டித்து, அவர்களின் வாழ்க்கை, சுதந்திரம், அமைதியான முறையில் கூடவும், வெளிப்படுத்தவும் உள்ள உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் எனக் கோருங்கள்.
  •     நோதீப் கவுரையும், அனைத்து போராட்டக்காரர்களையும் மற்றும் ஊடகவியலாளர்களையும்  உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும் எனவும் கோருங்கள்.
  •     சுதந்திரமாக தொலை  தகவல்களையும், இணையம் மற்றும் சமூக வலைதளங்களையும்  பயன்படுத்துவதை மீட்டமைக்கக் கோருங்கள்.
  •     தேசிய அணிதிரட்ட லுக்கு எதிராக செயல்படும் இந்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டனம் செய்யுங்கள்.
  •     இந்தப் பிரச்சனைகளை  ஐ.நா. விலும், பிற பன்னாட்டு அமைப்புகளிலும் மற்றும் உலக அரசுகளிடமும் எழுப்புங்கள்.
  •     போராட்டத்தைக் பார்வையிட ஒரு பன்னாட்டுக் குழுவை அனுப்ப வாதிடுங்கள்.
  •     விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தியுங்கள்.
  •     நிலைமையைப் தொடர்ந்து கண்காணியுங்கள்.

குடிமை மற்றும் மனித உரிமை வழக்கறிஞர்கள் அனைத்து மக்களின் மரியாதைக்காகவும் மனித நேயத்திற்காகவும் வாதிடுவதில் உறுதியாக இருப்பதால், இந்தியா அடிப்படை உரிமைகளைப் புறக்கணிப்பதையும், ஒரங்கட்டப்படுதல், விலக்குதல், பாகுபாடு மற்றும் வன்முறைக்  கொள்கைகளைத் தொடர்வதையும் கண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். வாழ்க்கைக்கான ஊதியத்திற்காக அமைதியான வழியில் எதிர்ப்பைத் தெரிவித்து, தன்னிச்சையான கைதுகளையும், வன்முறைகளையும் எதிர் கொள்ளும்,  விவசாயிகளுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்தியாவில் முக்கிய பங்காற்றும் முதல்நிலை வினையாற்றுபவர்களான, சிறை வழக்கறிஞர்களான, அரசியலமைப்பு பாதுகாவலர்களான வழக்கறிஞர்களுக்கும், சட்டப்பணி ஆற்றுபவர்களுக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், உங்கள் நிர்வாகத்தையும், சுயநினைவுள்ள அனைத்து மக்களையும் ஒற்றுமைக்காகவும், ஆதரவுக்காகவும்  குரல் எழுப்பக் கேட்டுக் கொள்கிறோம்.

/கையொப்பமிடப்பட்டது/

 

www.thewire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

விவசாயிகள் மீது இந்திய அரசின் அடக்குமுறை: ஐ.நா சபைக்கு எடுத்துச் செல்ல  அமெரிக்க அதிபரை வலியுறுத்தும் இந்திய வம்சாவளியினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்