Aran Sei

விருதுநகரில் ஒரு வயது பெண் குழந்தையை விற்ற தாய் – 9 பேரை கைது செய்த காவல்துறையினர்

விருதுநகர் மாவட்டம் சூலக்கரைப் பகுதியில் 1 வயதே ஆன ஹாசினி என்ற பெண் குழந்தையை ரூபாய் 2.30 லட்சத்துக்கு விற்ற தாய் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (பிப்பிரவரி 16) மதியம் 12:35 மணியளவில் சைல்டுலைனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது, அதில் ஒரு குழந்தையை அவரது தாயும், தாத்தாவும் இணைந்து விற்றுள்ளதாக வந்த தகவலை ஒட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை – அதிகார முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு

சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் குருசாமியின் வழிகாட்டுதலின்படி களப்பணியாளர் முருகன் மற்றும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சமூக சேவகர் கார்த்திகை ராஜா ஆகியோர் கலைச்செல்வியின் வீட்டுக்குச் சென்று, இந்த விஷயத்தை உறுதிசெய்தனர்.

இதனையடுத்து கலைச்செல்வியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தந்தை கருப்புசாமியுடன் சேர்ந்து மதுரையில் உள்ள ஒரு தம்பதிக்கு இடைத்தரகர்களின் உதவியுடன் தனது ஒரு வயது பெண் குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக மதுரை ஜெய்ஹிந்துபுரத்துக்கு விரைந்து சென்ற சிறப்புக் குழுவினர் அந்த பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.

ஹரியானா மக்களுக்கு தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் தடையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

கலைச்செல்வி, அவரது தந்தை கருப்புசாமி, இடைத்தரகர்கள் கார்த்திக், மகேஸ்வரி, மாரியம்மாள் மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதிகளான கருப்புசாமி, பிரியா மற்றும் கார் ஓட்டுநர்கள் செண்பகராஜன், நந்தகுமார் ஆகியோரைக் கைது செய்த காவல்துறையினர்,  குற்றஞ்சாட்டப் பட்டவரிடமிருந்து 2,30 லட்சம் பணம் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் மதுரை, கோவை, திருப்பூரைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : newindianexpress

விருதுநகரில் ஒரு வயது பெண் குழந்தையை விற்ற தாய் – 9 பேரை கைது செய்த காவல்துறையினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்