கல்லூரி மாணவியிடம் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக வந்து ஆபாசமாக பேசிய பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
அக்கல்லூரியின் தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு, வீடியோக்கால் செய்து நிர்வாணமாக வந்ததுடன், ஆபாசமாக பேசியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இது சம்பந்தமான காணொளி தற்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவ – மாணவிகளின் அலைப்பேசிக்கு திடீரென பரவியதால் மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வீடியோக்காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசிய கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு அவரிடருந்து கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தனியார் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான்கிரேஸ், பாஜக சிறுபான்மை பிரிவு முன்னாள் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட பாஜக தலைவர் பெண்டகன் ஜி பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு வாத்தி ரெய்டு | கொந்தளித்த actor Vijay ரசிகர்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.