ஆந்திரபிரேதேசத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ல கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர். அம்பேர்கரின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அமலாபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் படுகாயமடைந்தனர்.
மும்மிடிவரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.சதீஷ் வீடு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.விஸ்வரூப்பின் வீட்டுக்கு வெளியே இருந்த மரச்சாமான்கள், காவல்துறை வாகனம், கல்வி நிறுவன பேருந்து ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதால் பல போலீசார் காயமடைந்தனர்.
போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயம் அடைந்தது துரதிருஷ்டவசமானது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று மாநில உள்துறை அமைச்சர் தனேதி வனிதா தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கு சில அரசியல் கட்சிகளும் சமூக விரோத சக்திகளும் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோனசீமா சாதன சமிதியின் தலைமையில் இந்த வன்முறை போராட்டம் நடைபெற்றது. அதில் அதன் உறுப்பினர்கள் ‘சலோ கோனசீமா’ அணிவகுப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.
மோதலில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை எங்களுக்குத் தெரியவில்லை. மாவட்டத்தின் பெயரை மாற்றும் திட்டத்தில் பல்வேறு பிரிவு மக்கள் மற்றும் குழுக்களால் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிரச்சாரத்தின் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டது என்று கோனசீமா காவல் கண்காணிப்பாளர் கேஎஸ்எஸ்வி சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மதியம், போராட்டக்காரர்கள் குழு அமலாபுரத்தில் உள்ள மணிக்கூண்டு வழியாக பல்வேறு திசைகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், காவல்துறை வாகனங்களை குறிவைத்து கற்களை வீசத் தொடங்கினர். இந்த மோதலின்போது அமலாபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஒய். மாதவ ரெட்டி மயக்கமடைந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மாலை 5 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மோதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இருப்பினும், கோனசீமா மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது என்று சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 4-ம் தேதி கிழக்கு கோதாவரியில் இருந்து புதிய கோனசீமா மாவட்டம் பிரிக்கப்பட்டது. மாவட்டத்திற்கு பி.ஆர். அம்பேத்கர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய விரும்பிய மாநில அரசு, முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மக்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விருக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
Source: The Wire
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview | Nenjukku Needhi | Arunraja
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.