அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் 7000 புகார்கள் பதிவாகியுள்ளன. சி விஜில் என்ற தேர்தல் ஆணைய செயலியின் வாயிலாக பதிவான புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இரு மாநில தேர்தல் தொடர்பாக 7000 புகார்கள் பதிவான நிலையில் இவற்றில் குஜராத்திலிருந்து 6130 புகார்களும், இமாச்சல் பிரதேசத்திலிருந்து 1040 புகார்களும் வந்துள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர் குஜராத்தில் பதிவான 6000 புகார்களில் 5100 புகார்கள் உண்மையானவை எனக் கண்டறியப்பட்டது. இவற்றில் பெரும்பாலனவை சுவரொட்டி, பேனர் சர்ச்சைகள் நிமித்தமானது.
இமாச்சல் பிரதேசத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான புகார்கள் கங்க்ரா பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக பிலாஸ்பூர், ஹமீர்பூர் தொகுதிகளில் பதிவாகி இருந்தன.இமாச்சலில் பதிவான புகார்களில் 75 சதவீத புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சி விஜில் என்ற தேர்தல் ஆணைய செயலியில் இந்த புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த செயலியில் பதிவாகும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : hindustantimes
Trichy Suriya Hints | Annamalai would be sacked from BJP | | Era Kumar | TN BJP | Amarprasad Reddy
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.