குஜராத் கலவரம் தொடர்பாக குஜராத் பைல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தால், அதை அனுமதிக்க தயாரா என்று பிரதமர் மோடியிடம் பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றம் தொடர்பாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் வெளியான திரைப்பட தற்போது பேசு பொருளாக மாறி இருக்கும் சூழ்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக குஜராத் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டிருக்கும் பதிவில், “குஜராத் கலவரம் தொடர்பான உண்மையை அடிப்படையாக கொண்டு, கலையை அடிப்படையாக கொண்டு குஜராத் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறேன். அதில், உங்களின் பங்கு குறித்து விரிவாக காட்டப்படும். படத்தை வெளியிட தடை விதிக்க மாட்டேன் என்று மக்களுக்கு முன்பாக வெளிப்படையாக உறுதியளிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்
மேலும், அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், “எனது ட்வீட்டிற்கு பிறகு சில தயாரிப்பாளர்களிடம் பேசினேன். அவர்கள் என் படத்தைத் தயாரிக்க தயாராக உள்ளனர். அவர்களுக்குத் தேவையானது, பிரதமர் தற்போது பேசி வரும் கருத்து சுதந்திரம்தான். இந்த படத்திற்கும் அதே உத்திரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.