Aran Sei

ஷ்ரத்தா கொலையை ஆதரித்து ரஷீத் கான் என்ற இஸ்லாமிய பெயரில் காணொளி வெளியிட்ட விகாஷ் குமார் – கைது செய்த காவல்துறை

ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை 35 துண்டுக்காக வெட்டி அப்தாப் கொலை செய்ததற்கு ரஷீத் கான் என்ற பெயரில் ஆதரவு தெரிவித்து பேசியவரை கைது செய்த உத்தரப்பிரதேச காவல்துறை அவரது உண்மை பெயர் விகாஷ் குமார் என தெரிவித்துள்ளார்கள்.

மும்பையை அடுத்த வசாயை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமிதாப் அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசியுள்ளார்.

இந்தநிலையில் மிககொடூரமான கொலை நிகழ்த்திய அவர் ‘கூகுள் தேடல் வரலாற்றால்’ (கூகுள் சர்ச் ஹிஸ்டரி) காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

மசூதி போன்று உள்ள பேருந்து நிலையத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்க வேண்டும் – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

அப்தாப் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஷ்ரத்தா மகாராஷ்டிராவின் துலிஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். அதில், “இன்று அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான்.

பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன் என்று கூறினான். கடந்த 6 மாதம் முன்பாகவும் அவன் இதேபோல் என்னை தாக்கினான். ஆனால், அப்போது எனக்கு காவல் நிலையம் வந்து புகார் கொடுப்பதற்கான தைரியமே இல்லை. அவன் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததால் நான் அஞ்சினேன்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாவில், ரஷீத் கான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் ஷ்ரத்தா வாக்கர் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அதை ஆதரித்து பேசிய காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பில்கிஸ் பானு வீட்டின் முன் பட்டாசு கடை போட்ட பாலியல் குற்றவாளிகள்: நாங்கள் அப்பாவிகள் ஏனெனில் இந்துக்கள் என தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் கருத்து

இந்த நிலையில் புலந்த்ஷா காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது உண்மை பெயர் ரஷீத் கான் இல்லை என்றும், விகாஷ் குமார் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விகாஷ் குமார் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : india today

ஜல்சா கட்சியின் பேக்கரி டீலிங் | (ஆ)பாசமலர் சூர்யா டைசியின் உருட்டு | Aransei Roast | Annamalaibjp

ஷ்ரத்தா கொலையை ஆதரித்து ரஷீத் கான் என்ற இஸ்லாமிய பெயரில் காணொளி வெளியிட்ட விகாஷ் குமார் – கைது செய்த காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்