Aran Sei

மஸ்குலர் டிஸ்றாபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் – மருத்துவ உதவி வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை

ஸ்குலர் டிஸ்றாபி என்கிற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நாளுக்குநாள் உடல் பலகீனமாகி படுக்கையில் நாட்களை கழித்து வரும் இருவருக்கு மருத்துவ உதவி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அறுகுவிளை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சுப்பையாவுக்கு மூன்று பிள்ளைகள். சுப்பையா காலமாகிவிட்டார். தாயின் சரோஜாவின் துணையோடு வாழ்ந்து வருகின்றனர்.

முதல் பெண் பிள்ளை வலை கம்பனி ஒன்றில் இரவு ஷிஃப்ட் இல் வேலை செய்து வருகிறார். இரண்டு ஆண் பிள்ளைகள் மூர்த்தி மற்றும் கிருஷ்ணன் 21 , 19 வயது கொண்டவர்கள்.

தங்களது 10 வயது வரை எல்லாரையும் போல மகிழ்ச்சியான இருந்தவர்கள் தீடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு தசை சிதைவு நோய் எனும் மஸ்குலர் டிஸ்றாபி என்கிற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நாளுக்குநாள் உடல் பலகீனமாகி படுக்கையில் நாட்களை கழித்து வருகிறார்கள் என்று அவர்களின் மருத்துவர் ஷிபு அரண்செய்யிடம் தெரிவித்தார்.

மேலும், ”இந்தக் கொடிய நோய்க்கு மருத்துவத்துறையில் மருந்து இல்லை, பிசியோதெரபி மட்டுமே தற்காலிகத் தீர்வை தரும், வறுமையின் காரணமாக தேவையான நேரத்தில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளாத காரணத்தினால் மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும் இந்த இரண்டு பேருக்கும் மருத்துவ உதவி வேண்டும்” என்றும் கூறினார்

ஆரம்பத்தில் பெரிதாக கவலை ஒன்றும் இல்லை ஆனால் இப்போது நடந்தால் மட்டும் போதும்,யாருக்கும் பாரமாக இருக்க விரும்ப வில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாக மருத்துவர் ஷிபு அரண்செய்யிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட  இவ்விருவருகும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் மருத்துவர் ஷிபு கேட்டுக்கொண்டுள்ளார்.

மஸ்குலர் டிஸ்றாபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் – மருத்துவ உதவி வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்