வேலூர் மாவட்டம் காட்பாடியில் பகுதியில் லத்தேரி பேருந்து நிலையத்திற்கு, அருகில் இன்று நடந்த வெடி விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தி இந்து செய்தியில் வெளியிட்டுள்ளது.
லத்தேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் வெடிக்கடை நடத்தும் மோகன் என்பவரின் கடையில் ஏற்பட்ட விபத்தில் அவரது இரண்டு பேரன்கள் உட்பட அவரும் உயிரிழந்துள்ளனர்.
முதல் கட்ட ஆய்வில் மின்கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முக சுந்தரம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் ஆய்வாளருக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
SOURCE; THE HINDU
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.