வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு வழங்கப்பட்டிருந்த சம்மனை காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரமணி 100 அடி சாலையில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை 4 பேர் எடுத்துச் சென்றனர்.
அவர்களை வழிமறித்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்தனர். திமுக கூட்டணி சார்பில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற நால்வரையும் இன்று (ஏப்ரல் 12) விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
சுகாதார அவசரநிலையை நோக்கி நகரும் குஜராத் – தன்னிச்சையாக வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்
இந்நிலையில், சம்மன் அனுப்பபட்டிருந்த நால்வரும் இன்று ஆஜராகவில்லை. மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம்மனும் திரும்பப் பெற்று இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்மன் திரும்பப் பெறப்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினரிடம் கேட்டபோது, “சம்மன் அனுப்பட்ட நால்வரும் எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்கள். அவர்கள் செயலைக் கவனக்குறைவாக மட்டுமே பார்க்க முடியும். மேலும் உயரதிகாரிகள் அனுமதியுடனும் அவர்களின் உத்தரவின் பெயரிலேயே சம்மன் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை இனி தேர்தல் ஆணையம் கவனிக்கும்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனிதநேய உணர்வோடு ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி – திருமாவளவன்
முன்னதாக இரு சக்கர வாகனத்தில் 15 வாக்குகள் பதியப்பட்டிருபப்தாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையைத் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
சம்மன் திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள்மீது திமுக கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்ட புகார் தொடர்பாக சி.எஸ்.ஆர் மட்டுமே பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : News 18 Tamil
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.