Aran Sei

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு: செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்தித்தாள்களில் அந்நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

தாமிர உருக்கு வளாகம், சல்பரிக் அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் விற்பனைக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால், அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திய நிலையில், ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்பாக விற்பனைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு வேதாந்தா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Source : economictimes

பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு: செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்