Aran Sei

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்: இந்துத்துவாவினர் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்

Credit: NDTV

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வ வேதிக் சனாதன் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சிவலிங்கம் அமைந்திருக்கும் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கம் இல்லை – சமாஜ்வாதி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் கருத்து

கியான்வாபி மசூதி தொடர்பாக சிவில் நீதிபதி ரவி குமார் திவாகர் விசாரித்து வந்த வழக்குகளை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சிவில் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசூதிக்குள் வழிபாடு உரிமை தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின் பெயரில் மசூதிக்குள் வீடியோ பதிவு செய்தது சட்டவிரோதமானது என்று இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கியான்வாபி மசூதி தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு மே 26 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source: NDTV

இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview | Nenjukku Needhi | Arunraja

 

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்: இந்துத்துவாவினர் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்