Aran Sei

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு; சட்டத்தை மீறும் நடவடிக்கை – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் அப்பட்டமான நடவடிக்கை என்று எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

வாரணாசியில் உள்ள கியான் வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் உத்தரவு, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் அப்பட்டமான மீறலாகும் என அவர் தெரிவித்தார். வழிபாட்டுத் தலம் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்ததைப் போலவே இருக்க வேண்டும், எந்த மதப் பிரிவின் புனிதத்தையும் யாரும் மாற்றியமைக்கக் கூடாது என்று அந்த சட்டம் வலியுறுத்துகிறது என ஃபைஸி குறிப்பிட்டார்.

கியான் வாபி மசூதி தொடர்பான சர்ச்சை மற்றும் இடையூறு ஒன்றும் புதிதல்ல. ஆனால், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற மத நிறுவனங்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான வரலாற்று நினைவுச்சின்னங்களின் உரிமையை அழிப்பது மற்றும் பறிப்பது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். அவர்களே கூறிக்கொண்டது போல், 3,000 மஸ்ஜித்களை இடிக்க அல்லது முஸ்லீம்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்கள் தயாரித்துள்ள பட்டியலில், பாபரி மஸ்ஜித் முதலாவதாகவும், கியான் வாபி பட்டியலில் இரண்டாவதாகவும் உள்ளது.

பாபரி மஸ்ஜிதை அழித்த அதே முறைதான் கியான் வாபி மஸ்ஜித் விஷயத்திலும் பின்பற்றப்படுகிறது. அந்நிய மதங்களையும் அவற்றின் அடையாளங்களையும் இடிப்பதும், அழிப்பதும் மனுவாதி இந்துத்துவ ராஷ்டிராவை நோக்கிய பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். ஆகவே, கியான் வாபி விஷயத்தில் பாபர் மஸ்ஜிதைப் பிரதியெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்த பைஸி, நாட்டில் உள்ள மதச்சார்பற்ற மக்களின் ஆதரவுடன், மஸ்ஜித் மற்றும் நாட்டில் அமைதியை அழிக்கும் இதுபோன்ற எந்தவொரு செயலுக்கும் எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி போராடும் என தெரிவித்தார்.

2014ல் தீவிர வலதுசாரி இந்துத்துவா பாசிஸ்டுகள் நாட்டின் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து, நாட்டின் அரசியலமைப்பு ஏற்கனவே ஒரு உயிரற்ற பொம்மையாக நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய பாசிச ஆட்சியாளர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் கீழ் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என தெரிவித்த பைஸி, சங்பரிவார்கள் நாட்டை மேலும் நாசமாக்குவதைத் தடுக்கவும், அதனைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் குடிமக்கள் தங்கள் மதங்களைக் கடந்து அமைதியான சகவாழ்வை உறுதிப்படுத்தவும், இந்திய மக்களைக் கைகோர்க்குமாறு வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி  கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள் | Thiyagu Interview

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு; சட்டத்தை மீறும் நடவடிக்கை – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்